இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் நான்கு போட்டி முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது.இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களை அடித்து இருந்தது.

அதன்பின் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்தில் சற்று சொதப்பல் இருந்தாலும் அதன் பின் ஜுரெலின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 307 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜுரேல் 90 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 73 ரன்களையும் கில் 38 ரன்கள் அடித்திருந்தனர். இன்றைய நாளிலே மீண்டும் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி 145 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன் பின் பேட்டிங் செய்த இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணி இந்தியாவில் நடந்த 17 தொடர்களையும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. அது மட்டும் அல்லாமல் கடந்த 10 வருடங்களுக்கு பிறகு 150 ரன்களுக்கு இருந்த இலக்கை இந்திய அணி இன்று தான் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஜுரேல் 129 ரன்களை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு துணையாக இருந்தார்.
வெற்றி குறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில்,டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் கடினமான வடிவம். நீங்கள் வெற்றியை விரும்பினால், இந்த கடினமான வடிவத்தில் சிறந்து விளங்க விரும்பினால், உங்களுக்கு அந்த பசி தேவை. இது மிகவும் முக்கியமானது. அந்த பசியில் இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்போம். இது மிகவும் முக்கியமானது. அந்த பசியில் இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்போம். அந்த பசி இல்லாத வீரர்கள்,
Rohit Sharma in youngsters hunger for Test cricket – pic.twitter.com/osv9683OQn
— Shivani (@shivani_45D) February 26, 2024
இங்கேயே தங்கி இந்த ஃபார்மேட்டில் விளையாட விரும்பாத வீரர்களை நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம். அந்த பசி உள்ள வீரர்கள், இங்கு தங்கி விளையாட விரும்பும் வீரர்கள், கடினமான சூழ்நிலையில் விளையாடுபவர்களுக்கு முன்னுரிமை அளிப்போம். வெளிப்படையாக, இது மிகவும் எளிமையானது: உங்களுக்கு பசி இல்லை என்றால், அத்தகைய வீரர்களை விளையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.ipl தொடர் முற்றிலுன் மாறுபட்டது. என்றும் அவர் கூறினார்.





