மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த பல தொடர் கொண்ட போட்டியில் இந்தியா ஒருநாள் தொடரிலும், டெஸ்ட் தொரிலும் வெற்றி பெற்ற நிலையில் டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 2 என்ற கணக்கில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது பல விதமான விமர்சங்கள் வைக்கப்பட்டது. இருந்த போதிலும் 2016இல் அறிமுகமாகி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டவர் ஹர்திக் பாண்டியா.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்று விமர்சித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் கருத்தை பொய்யாக்கும் வகையில் 2018 நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்து அசத்திய அவர் கபில் தேவுக்கு பின் ஒரு வழியாக இந்தியாவுக்கு வேகப்பந்து வைத்து ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் அளவுக்கு அசத்தினார்.
ஆனால் அதன் பின் சந்தித்த காயத்தால் தடுமாறிய அவர் 2021 டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக கழற்றி விடப்பட்டார். இருந்த போதிலும் 2022 ஐபிஎல் கோப்பையை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருங்கால கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார். ஆனாலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை தன்னுடைய 29 வயதிலேயே நிறுத்தி விட்டார் ஹர்திக் பாண்டியா.

இதனை காரணமாக ஹர்திக் பாண்டியா போல ஒரு ஆல்ரவுண்டர் இல்லாமல் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தடுமாறியது. இதற்கு முன்னர் ஜம்பான்கள் ரிக்கி பாண்டிங் போன்ற கேட்ட போதிலும் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடத்தால் அவரின் மீது அதிகமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் பார்த்த போது இந்தியாவிலேயே மிகச்சிறந்த உடற்கட்டை கொண்ட நபராக ஹர்திக் பாண்டியா தெரிந்ததாக கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் “பாண்டியா ஃபிட்டாக இல்லாதது போல் தோன்றவில்லை. இன்று ஒரு விளம்பர புகைப்படத்தில் நான் அவரை பார்த்தேன். அதில் அவர்கள் எடிட்டிங் செய்தார்களா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை ஆனாலும் அதில் இந்த நாட்டிலேயே மிகவும் ஃபிட்டான உடலைக் கொண்ட ஒருவராக எனக்கு தோன்றியது. எனவே நல்ல திறமையை கொண்டுள்ள அவர் அதிகப்படியான கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். குறிப்பாக ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்.

இங்கே வீரர்களை யாருடனும் ஒப்பிடுவது சரியல்ல. கடந்த 20 – 30 வருடங்களில் நாமும் சில நல்ல தரமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கியுள்ளோம். அதே சமயம் முக்கிய போட்டிகளில் சாதிக்க உங்களுக்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் மட்டுமே தேவை என்பது கிடையாது. மாறாக சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களும் உங்களுக்கு தேவை. அந்த வகையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் மிகச் சிறந்த வேலையை செய்து வருகின்றனர். எனவே நம்மிடம் போதுமான ஆல் ரவுண்டர்கள் இல்லை என்று அர்த்தமல்ல” என கூறினார்.





