இன்னும் சில நாட்களின் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அப்படி அந்த விறுவிறுப்புக்கு முன்பாக பல முடியமாக் போட்டிகள் நடிப்பெற இருக்கிறது. குறிப்பாக ஆசிய கோப்பை, இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடர்கள் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்திற்கும் இடையே வரலாற்று சிறப்பவுமிக்க ஆஷஸ் தொடரானது நடைபெற்று வருகிறது.

இதுவரையில் 34 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 32 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றிருக்கிறது. மேலும் 6 முறை போட்டியானது சமன் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வருடத்திற்காக ஆஷஸ் தொடரானது தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலியா முதல் போட்டியில் அபாரமான வெற்றியை பதிவு செய்த நிலையில் அடுத்ததாக 2 வது போட்டியானது லார்ட் மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியக்கு தொடக்கத்தில் ஒரு விக்கெட் விழுந்தாலும் சிறப்பாக விளையாடிய வார்னர் 66 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதற்கு பிறகு வந்த அஸ்திரலியாவின் பேட்மேன்கள் இங்கிலாந்தின் பௌலர்களை பந்தாட ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 என்ற அற்புதம் ரன்களையும் எட்டியது.

இந்நிலையில் இரண்டாவது நாளின் அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க்கை அடுத்தடுத்து இழந்தனர் ஆஸ்திரேலியா. இருப்பினும் விக்கெட்டுகளினால் கலங்காமல், ஸ்மித் தனது 32வது டெஸ்ட் சதத்தை அதிரடியாக பதிவு செய்தார். தன்னுடய நாட்டை விட்டு வெளியே நடக்கும் போட்டிகளில் இந்த சதம் ஸ்மித்தின் 15வது சதமாகும். மேலும் இதற்கு முன்னர் முன்னாள் ஆஸ்திரேலியாவின் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும், ஸ்டீவ் வாயுகுத்ஸ் மட்டுமே 16 சதங்களை தங்களுடைய நாட்டிற்கு வெளியே அடித்துள்ளார்.

ஆனால் சதம் அடித்த பிறகு ஸ்மித் 184 பந்துகளில் 110 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். இருந்த போதிலும் ஸ்மித்திற்கு இது ஆஷஸ் தொடரில் 12வது சதமாகும். இதன் மூலம் ஆஷஸ் வரலாற்றில் இரண்டாவது அதிக சதங்களை இங்கிலாந்தின் ஜாக் ஹோப்ஸுடன் சமன் செய்தார். மேலும் இந்த சதத்தின் மூலம் எத்தனை பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் வந்தாலும் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டின் GOAT என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ஸ்மித்.
இதனை தொடர்ந்து ஸ்மித்திற்கு பாராட்டுகளும் ட்விட்டர் மற்றும் சோசியல் மீடியா பக்கங்களில் பரவி வருகிறது. இவரது இன்னிங்க்கின் மூலம் ஆஸ்திரேலியாவினால் 416 ரன்களை எட்ட முடிந்தது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணி விளையாடி கொண்டிருக்கிறது. 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லஞ்ச் பிரேக் விடப்பட்டுள்ளது.





