சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருப்பவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மொயின் அலி. இவருக்கு தற்போது 35 வயதாகினாலும் தன்னுடைய பார்மை இழக்காமல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் இதுவரையில் மொயின் அலி 129 ஒருநாள் போட்டியால் 74 டி20 போடிகள் 59 ஐபிஎல் போட்டிகள் மற்றும் 63 டெஸ்ட் போட்டிகள் என கிரிக்கெட்டில் ஜொலித்து வருகிறார். அதுமட்டுமல்லால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2914 ரன்களையும் 195 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மொயின் அலி பெரிதாக எதுவும் செய்யவில்லை என்றாலும், சில முக்கியமான போட்டிகளில் விக்கெட்டுகளையும் ரன்கள் தேவைப்படும் போது சில சிக்ஸர்களையும் பறக்க விட்டிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் கடந்த 2021ஆம் ஆண்டு தான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐஐந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் தான் அவரை மீண்டும் டெஸ்ட் அணிக்கு கொண்டு வந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். அதாவது தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடக்கும் உலக சாம்பியன் ஷிப் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை வரும் ஜூன் 16ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆஷஸ் தொடரில் மோத இருக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவிற்கு இங்கிலாந்திற்கும் எதிராக நடக்கும் இந்த போட்டியானது பெரிய அளவு எதிர்பார்ப்பை கிரிக்கெட் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாக கருதப்படும் இந்த தொடர் கடந்த 1882ஆம் ஆண்டில் இருந்தே நடைபெற்று வருகிறது. இதுவரையில் 72 முறை நடந்துள்ள நிலையில் அதில் இங்கிலாந்து 32 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 போட்டிகள் சமனாகவும் முடிந்திருக்கிறது.
இப்படி ஒரு முக்கியமான போட்டியில் விளையாட இருந்த ஜேக் லீச் காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மொயின் அலியை நாடியாது. கடந்த ஒரு வாரமாக மொயின் அலியுடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் மொயின் அலி மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பியுள்ளார். மேலும் வரும் ஆஷ்ஸ் தொரிலும் முதல் 2 போட்டிகள் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மொயின் அலி சிறப்பான ஆல்ரவுண்டர் என்பதினால் கண்டிப்பாக பந்துவீச்சில், பேட்டிங்கிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று பல முன்னாள் வீரர்கள் தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.





