ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 2023 இன் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இதுவரை அந்த அணியின் சிறப்பாக விளையாடி இருந்தனர். ஸ்மித் 121 ரன்கள் எடுத்தார், அதேசமயம் ஹெட் 163 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவினார்.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் திறமையைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி, கேப்டன் ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கினர். இந்நிலையில் இந்த அணிக்கு மிகவும் மோசமான தொடக்கமே கிடைத்தது. ரோஹித் சர்மா நம்பிக்கையுடன் இன்னிங்ஸைத் தொடங்கினாழும் பேட் கம்மின்ஸால் 15 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கும் பொறுப்பு நட்சத்திர பேட்டரான ஷுப்மான் கில்லின் தோள்களில் விழுந்ததால் அழுத்தத்தை தாங்க முடியாமல் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டனிடம் ஆட்டமிழந்தார். ஸ்காட் போலண்ட் பந்தை வீசிய நிலையில் அதனை விட சுப்மன் கில் முயற்சி செய்தார். ஆனால் அந்த பந்து நேரடியாக ஸ்டம்பை தாக்கியது.
Erri pappa #ShubmanGill #WTCFinal pic.twitter.com/5E4LkAlIX5
— Ravi Teja (@raviteja003) June 8, 2023
ஸ்காட் போலண்ட் போட்ட அந்த அற்புதமான பந்தை கில் விளையாடுவதா அல்லது அதை விட்டுவிடுவதா எனத் தெரியாமல் இந்தநிலையில் அவர் எடுத்த முடிவு ஆட்டமிழக்க செய்தது. இந்திய அணிய இளம் பேட்ஸ்மேனான சுப்மன் கில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த போட்டியில் 15 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். WTC இறுதிப் போட்டியில் கில் மீது பலர் பெரிய எதிர்பார்ப்புகளை வைத்திருந்த நிலையில் அவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் சமீபத்தில் முடிவடைந்த இந்தியன் பிரீமியர் லீக் 2023ல், 17 போட்டிகளில் 890 ரன்கள் குவித்ததன் மூலம், கில் அதிக ரன்கள் எடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் WTC இறுதி போட்டியின் முதல் இன்னிங்ஸில் தனது ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தார். இதனால் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார் சுப்மன் கில்.

தற்போது நடந்து வரும் பொடியை பொறுத்தவரையில் முதல் டாஸை இழந்து முதல் இன்னிங்கில் ஆஸ்திரேலியா 469 ரன்களை விளையாசியாது. அடுத்ததாக ஆடிய வரும் இந்திய அணி இந்த செய்தியை எழுதும் வரையில் ஓவர்கள் ஆடி விக்கெட்டுகள் இழப்பிற்கு ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. மேலும் தற்போது ஆடிவரும் ஜடேஜாவும், ரஹானேவும் மட்டுமே தான் இந்தியாவின் நம்பிக்கையாக இருந்து வருகின்றனர்.





