சமீபத்தில் நடந்த 2023ஆம் ஆண்டு உலக சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. அதன்வெற்றியை பெட்ரா கையோடு தற்போது ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது இங்கிலாந்து அணி. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 393 ரன்களை எடுத்து டிக்ளேர் கொடுத்தது. அதற்கு பிறகு ஆஸ்திரேலியா 386 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்கை விளையாடிய இங்கிலாந்து தடுமாறி 273 எடுத்த நிலையில் 281 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா தடுமாறினாலும் இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 2023 ஆஷஸ் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த தோல்விக்கு முதல் இன்னிங்கில் 78 ஓவர்கள் மட்டுமே கடந்திருந்த நிலையில் இங்கிலாந்து டிக்ளர் கொடுத்தது காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் “இந்த போட்டியின் கடைசி வரையில் எடுத்துச் சென்றதில் மிகவும் பெருமையாக இருக்கிறது. இது நாங்கள் விளையாடும் தலைசிறந்த டெஸ்ட் விளையாட்டின் மற்றொரு சிறந்த அங்கமாகும். இந்த டெஸ்ட் முழுவதும் ரசிகர்களை அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் வந்து அமரவைக்கவில்லை என்றால் நான் மிகவும் ஆச்சரியப்படுவேன். இதுவும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் ரசிகர்கள் அதிகமான ஆஷஸைப் பின்பற்றுவதற்கு ஒரு காரணம் என்று கூறலாம்.

போட்டியில் தோல்வி என்பது தோல்விதான், ஆனாலும் தொடர்ந்து இதே போன்ற அணுகுமுறையை தான் நாங்கள் பின்பற்ற போகிறோம். சரியானதாக உணரும் சில முடிவுகளை எடுப்போம். நாங்கள் டிக்ளர் கொடுத்ததில் எங்களுக்கு துளியும் வருத்தம் இல்லை. அதனை நாங்கள் ஆஸ்திரேலியா மீது அழுத்தம் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக பார்த்தேன். என்னென்றால் ஒருவருக்கு வெளியே சென்று 20 நிமிடங்கள் பேட் செய்வது எளிதல்ல.
யாருக்கு தெரியும்? ஒரு வேளை ரூட்டும் ஜிம்மியும் அவுட் ஆகி இருக்கலாம் , எனவே இந்த முடிவுரை எடுத்த்தில் எங்களுக்கு வருத்தம் கிடையாது. ஜோ ரூட் மிகவும் நேற்று அவர் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. முதல் அரை மணி நேரத்தில் அவர் காட்டிய துணிச்சல் நம்பமுடியாதது. விளையாட்டை முழுவதும் தங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருதார்கள் எனவே ஆஸ்திரேலியாவை பாராட்டியே ஆகவேண்டும்.

நேற்றும் இன்றும் பிராட் மற்றும் ராபோ எடுத்த முயற்சிகள் நம்பமுடியாதவை, உங்கள் மார்பில் மூன்று சிங்கங்களுடன் ஓடுவது எப்போதும் உங்களுக்கு கூடுதல் உந்துதலை அளிக்கிறது என்றார் பென் ஸ்டோக்ஸ். குறிப்பிடத்தக்க வகையில் இன்னமும் 4 போட்டிகள் இருக்கிறது இங்கிலாந்து அணிக்கு. ஆனால் ஆஸ்திரேலியா இனமும் இரண்டு போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில் இந்த ஆஷஸ் தொடரை வெற்றிபெறும். மேலும் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற கையேடு ஆஷஸ் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்பு அஸ்தியிலியாவிடம் இதிலிருந்தே தெரிகிறது.





