சமீபத்தில் நடந்த 2023ஆம் ஆண்டு உலக சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. அந்த வெற்றியை பெற்ற கையோடு தற்போது ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது இங்கிலாந்து அணி. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 393 ரன்களை எடுத்து டிக்ளேர் கொடுத்தது. அதற்கு பிறகு ஆஸ்திரேலியா 386 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்கை விளையாடிய இங்கிலாந்து தடுமாறி 273 எடுத்த நிலையில் 281 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா தடுமாறினாலும் இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 2023 ஆஷஸ் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த தோல்விக்கு முதல் இன்னிங்கில் 78 ஓவர்கள் மட்டுமே கடந்திருந்த நிலையில் இங்கிலாந்து டிக்ளர் கொடுத்தது காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த போட்டியில் வெற்றிபெறுவதற்கு சிறப்பாக விளையாடி சதம் அடித்த கவாஜா முதல் காரணம் என்றால் இரண்டாவது காரணம் ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஏனென்றால் இக்கட்டான சூழ்நிலையில் இரண்டாவது இன்னிங்கில் பொறுப்பான கேப்டனாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளையும் 44 ரன்களையும் விளாசினார்.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேட்டி கொடுத்த பாட் கம்மின்ஸ் பேசுகையில் “இந்த வெற்றியானது கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் ஹெட்டிங்லே போட்டியை எங்களுக்கு நினைவு படுத்தவில்லை என்றால் அது பொய் சொல்வதாக அர்த்தம். அந்த போட்டியின்போது நாங்கள் வெற்றிபெறத்து எப்போதுமே சோகத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இன்று எங்களுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி அதற்கு மருந்தாக அமைந்துள்ளது.
ட்ரெஸிங் ரூமில் இருக்கும் அனைவருக்கும் இது மகிழ்ச்சியை கொடுக்கும். நிச்சயமாக நாங்கள் தான் நம்பர் ஒன் கிரிக்கெட் அணி என்பதை நிரூபித்துள்ளோம். மேலும் இது என்னுடைய வாழ்நாளில் கிடைத்த மாபெரும் வெற்றி. கடந்த 2 ஆண்டுகளில் 20 டெஸ்ட் போட்டிகளுக்கும் அதிகமாக சிறப்பாக எங்களுடைய அணி விளையாடி வருகிறோம். அதிலும் எங்களுடைய கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படும் போது மிகசிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

இந்த போட்டியின் போது மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் சிலர் எங்களுடைய கவனத்தை சிதைக்கும் கோஷங்களை எழுப்பினார்கள. ஆனால் அவைகளையும் மீறி நங்கள் வெற்றிபெற்றிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த போட்டியில் ஒருவேளை இங்கிலாந்து அணி முதல் இன்னிங்கில் டிக்ளேர் கொடுக்கவில்லை என்றால் இன்று நான் அரை சதம் விளாசியிருப்பேன் என்றார் பாட் கம்மிங்ஸ்





