ஐபிஎல் 2023 தொடரானது நிறைவடைந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டிக்காக உலகமே இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைத்தனத்தை உற்று நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு கரணம் உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணிகளான ஆஸ்திரேலியாவும், இந்தியாவுக்கு இடையே நடைபெறுவதினால் தான். இந்நிலையில் பலம் வாய்த்த ஆத்திரேலியாவிற்கு எதிராக பந்து வீச போகும் ஷர்துல் தாகூர் பைனலுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார்.

ஷர்துல் தாகூர் கூறியது :
அவர் பேசுகையில்” ஐசிசி போட்டிகளை பொறுத்தவரையில் குறிப்பாக இறுதி போட்டிகளில் நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் விளையாட முடியாது என்று நான் உணர்கிறேன். எனவே இது ஒரு சில வீரர்கள் மட்டுமே அல்லது என்னைப் போன்ற ஒருவருக்கு தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே நடக்கும் தருணம். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சரியாக செயல்படுவதே என்னுடைய எண்ணமாக இருந்து வருகிறது.
ஒரு கிரிக்கெட் வீரர் தன்னுடைய நாட்டைப் மற்ற நாடுகளுக்கு இடையே பிரதிநிதிபடுத்த எப்போதுமே ஒரு சிறப்பான தருணமாக இருக்கும். குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் தேசத்திற்காக விளையாட வேண்டும் என்று கனவு காணும் ஒரு பில்லியன் மக்கள் அங்கு இருக்கும்போது சிறந்த 15 பேர் மட்டுமே நாட்டைப் பிரதிநிதிபடுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஜூன் 7 முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காக இங்கிலாந்தில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் மிகவும் சிறப்பானதாக உணர்கிறேன், பெருமையாக இருக்கிறது என்று கூறினார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக பந்து வீசிய தக்கூர் 36 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அவர் 31 ரன்களில் 50 ரன்கள் எடுத்தது இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் பதிவு செய்யப்பட்ட அதிவேக அரை சதம் மற்றும் இந்தியாவுக்காக இரண்டாவது அதிவேக அரை சதம் ஆகும்.

மேலும் தன்னுடைய பழைய ஆட்டத்தை நினைவு கூர்ந்த தாகூர் பேசுகையில் “ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் உங்களின் முந்தைய ஆட்டங்களை நினைவில் வைத்துக் கொள்வது எப்போதுமே நல்லது, ஆனால் ஒவ்வொரு ஆட்டமும் ஒரு புதிய தொடக்கம். இந்த முறை வேறொரு அணிக்கு எதிராக விளையாடுகிறீர்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் கடந்த காலத்தில் செய்தவற்றிலிருந்து உங்களுக்கு ஊக்கமளித்து கொள்வது எப்போதும் நல்லது என்று கூறினார் ஷர்துல் தாகூர்





