ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் சில இளம் வீரர்கள் மோசமான வார்த்தைகளிலும் பெறுகின்றனர். அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதிவ் ஷாவை கூறலாம். U 19ல் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் நுழைந்த இவர் காலப்போக்கில் சில மோசமான ஆட்டங்களினால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளனர்.

மேலும் இந்திய அணியில் இருந்து மோசமான பார்ம் காரணமாக துக்கப்பட்ட ப்ரிதிவ் ஷா கடந்த 2023 ஐபிஎல் போட்டியிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஒரே ஒரு போட்டியில் மட்டுமே 50 ரன்களை கடந்த அவர் பல போட்டிகளில் டக் அவுட்டானார். இந்நிலையில் தற்போது துலீப் டிரபியில் விளையாடி வரும் ப்ரிதிவ் ஷா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் சில விஷயங்களை கூறியுள்ளார்.
தனிப்பட்ட முறையில், நான் எனது விளையாட்டை மாற்ற வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் இப்போது இருப்பதை விடவும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். புஜாரா சார் பேட் செய்வது போல் என்னால் பேட் செய்ய முடியாது அதே போன்று புஜாரா சார் என்னை போல் பேட் செய்ய முடியாது. எனவே, நான் என்ன செய்ய முயற்சிக்கிறேன் என்பது என்னை இங்கு வரையில் கொண்டு வந்த விஷயங்கள். எடுத்துக்காட்டாக, ஆக்ரோஷமான பேட்டிங், அதை மாற்ற நான் விரும்பவில்லை என்றாராம் ப்ரிதிவ் ஷா.

மூத்த அணிக்கு திரும்புவதற்காக தனது வாழ்க்கையில் இந்த கட்டத்தில் தன்னால் முடிந்தவரை பல விளையாட்டுகளை விளையாட விரும்புவதாக ஷா பேசியுள்ளார். இப்போது எனக்கு எந்த மாதிரியான ஆட்டமாக இருந்தாலும் அது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நான் துலீப் டிராபி அல்லது எனது மும்பை ஆட்டத்தில் விளையாடினாலும், எனது சிறந்ததை வெளிக்கொணருவது செய்வது என்பது எனக்கு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்.
மேலும் பேசிய ப்ரிதிவ் ஷா பேசுகையில் “கிரிக்கெட்டி நீங்கள் எப்போதும் சரியானவராக இருக்க முடியும் என்பது கிடையாது. ஆனால் இது போன்று பல விஷயங்கள் (ரன்கள் எடுக்காமல்) நடந்த பிறகு நான் கடினமாக முயற்சி செய்கிறேன். டி20 போட்டிகளானது கொஞ்சம் வேகமாக இருக்கிறது. ஆனால் அதே மனநிலையுடன் நான் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது T20 போன்று அதே வழியில் கிடையாது.

நான் அங்கு என்ன செய்ய வேண்டும் என்றால் பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும். அவர்களை திசை திருப்பி எனக்கு தேவையான பந்தை கொடுக்க அவர்களை கட்டாயப்படுத்தி அவர்கள் எனக்கு வீச விரும்பாத பந்துகளை வீச வைப்பதே என்னுடைய எண்ணம் ஆகும் என்று பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்த ப்ரிதிவ் ஷா.





