உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வென்றியடைய பெரும் பங்காற்றி இருக்கிறார். குறிப்பாக விராட் கோலி தலைமையினால இந்திய அணியில் இவர் எடுத்த விக்கெட்டுகள் பல. அதற்கு விராட் கோலி இவரை நம்பி பௌலிங் கொடுத்ததும் ஒரு காரணம். ஆனால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் அஸ்வின் இடப்பெறவில்லை.

இதனால் வெளிநாட்டு வீரர்களோடு இந்திய அணியின் பல சம்பவங்களும் இந்திய தேர்வாளர்களிடையும், கேப்டன் ரோஹித் ஷர்மாவையும் கடுமையாக விமர்சித்தனர். இதன் காரணமாக என்னவோ? இந்தியா இந்த இறுதி போட்டியில் மிக மோசமான தோல்வியை தழுவியது. இந்நிலையில் தான் அந்த தோல்வியில் இருந்து மீளவும் அடுத்த உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் 2023- 25 சுழற்சியானது தொடங்கியுள்ளது.
அஸ்வின் எடுத்த விக்கெட்டுகள் :
இதில் முதல் போட்டியாக இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடைபெறுகிறது. மேலும் இதில் அனைவரும் கணித்தது போன்றே அஸ்வினும் இடம்பெற்றுள்ளார்.இதனிடையே அஸ்வின் ஒரு சாதனையை படைக்க இனமும் 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவை படுகிறது. அதாவது அஸ்வின் இதுவரையில் சர்வதேச போட்டிகளில் விளையாடியதில் 92 டெஸ்ட் போட்டிகளில் 474 விக்கெட்டுகளையும், விளையாடிய 113 சர்வதேச 113 ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளையும், விளையாடிய 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.

இதனால் ஐபிஎல் தவிர்ந்து எல்லா சர்வதேச போட்டிகளில் எடுத்த விக்கெட்டுகளையும் சேர்த்து 697 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே இன்னமும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படிக்க அஸ்வினுக்கு இன்னமும் 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.
அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியல் :
சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் சுழற்பந்து வீச்சு மந்திரவாதி முத்தையா முரளீதரன் 495 போட்டியில் 1347 விக்கெட்டுகள் எடுத்து அசைக்க முடியாமல் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னீ 339 போட்டிகளி 1001 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதோடு 367 போட்டிகள் ஆடிய ஹர்பஜன் சிங் 711 விக்கெட்டுகளுடன் 14 வது இடத்தில் இருக்கிறார்.

சாதனை படைப்பாரா?
இந்நிலையில் அஸ்வின் தற்போது 697 விக்கெட்டுகளுடன் 17 வது இடத்தில் இருக்கும் நிலையில், இன்னமும் 15 விக்கெட்டுகள் எடுத்தால் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்து 14 வது இடத்திற்கு முன்னேறுவார். எனவே நாளை தொடங்க இருக்கும் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அஸ்வின் சிறப்பாக விளையாடி மீண்டும் தன்னுடைய டெஸ்ட் இடத்தை தக்க வைத்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





