உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியானது தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் அது தவறான முடிவு என்று பின்னர் தான் தெரிந்தது. ஏனென்றால் இந்தியாவின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்ட ஆஸ்திரேலியா 2 வது நாளில் 469 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. மேலும் பந்துவீச்சில் சிற்ப்பாக செயல்பட்டு இந்தியாவை 296 ரன்களுக்குள் சுருட்டியது.

இந்நிலையில் இரண்டவது இன்னிங்கை ஆடிய ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் கொடுத்தது. இதனையடுத்த தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்றைய நாள் முடிவின் போது இந்தியா 164 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் தற்போது விராட் மற்றும் ரஹானே மட்டுமே இந்திய அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள்.
விராட் கோலி 60 பந்துகளில் 44 ரன்களையும், ரஹானே 59 ரன்களில் 20 ரன்களையும் எடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தான் நேற்று போட்டி தொடங்குவதற்கு முன்னதாக முன்னாள் பஸ்கிஸ்தான் அணியின் வீரரான பாசித் அலி பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் இந்திய அணியின் முடிவுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது “முதல் இரண்டு மணி நேரம் கவலைப்பட்டு பந்துவீசத் தேர்ந்தெடுத்த தருணத்தில் இந்தியா போட்டியை இழந்தது.

மேலும் பந்துவீச்சு ஐபிஎல் போலவே இருந்தது. மதிய உணவின் போது, இந்திய பந்துவீச்சாளர்கள் போட்டியை வென்றது போல் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இந்தியா இப்போது செய்யக்கூடியது ஒரு அதிசயத்தை எதிர்பார்க்கலாம். இந்தியா பீல்டிங் செய்யும் போது 120 ஓவர்களில், ரஹானே, கோஹ்லி மற்றும் ஜடேஜா ஆகிய 2-3 வீரர்கள் மட்டுமே உடற்தகுதியுடன் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. மீதமுள்ளவர்கள் சோர்வாக காணப்பட்டனர்.
மேலும் பாசித் அலி அவர் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை கடுமையாக விமர்சித்து பேசினார் இந்தியாவில் சமீபத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது இந்தியா எந்த வகையான விக்கெட்டுகளை தயார் செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார் ” நான் ராகுல் டிராவிட்டின் மிகப்பெரிய ரசிகனாக எப்போதுமே இருந்திருக்கிறேன், இருப்பேன். அவர் ஒரு கிளாஸ் பிளேயர், ஒரு ஜாம்பவான். ஆனால் ஒரு பயிற்சியாளராக பூஜ்ஜியமாக இருக்கிறார்.

இந்தியாவில் திரும்பும் விக்கெட்டுகளை தயார் செய்துளீர்கள். இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள், இந்தியா ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது, இதே போன்ற விக்கெட்டுகள் இருந்தனவா? அவர்களிடம் பவுன்சி பிட்ச்கள் இருந்தன, இல்லையா? அவர் என்ன நினைக்கிறார் என்பது கடவுளுக்குத் தெரியும். கடவுளுக்கு தெரியும் அனைவருக்கும் அவர் மூளையை கொடுக்கும் போது எங்கே இருந்தார் என்று என ட்ராவிட்டை கடுமையாக விமர்சித்து பேசினார் முன்னாள் பாஸ்கிதான் வீரர் பாசித் அலி.




