வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது 141 ரன்கள் என்ற கணக்கில் வென்றது. 3 ஆம் நாளில் வெறும் 130 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஆல் அவுட்டானது. ஏனெவே இந்திய அணியானது 2வது இன்னிங் ஆடாமலேயே தோல்வியை தழுவ. ரவிச்சந்திரன் அஷ்வின் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களை விளாசினார்.

இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு இஷான் கிஷான் விளையாட வந்தார். ஐபிஎல் போட்டியில் இஷான் கிஷான் சில சிறப்பான போட்டிகளில் விளாடியுள்ளார், இருந்த போதிலும் இவருக்கு 5வது இடத்தில் தான் வாய்ப்பு கிடைத்தது. அதோடு இது இவருக்கு முதல் டெஸ்ட் போட்டியாகும் அப்படிப்பட்ட நிலையில் இஷான் கிஷான் களமிறங்கி சிறிது நேரத்திலேயே இந்தியா டிக்ளர் கொடுத்தது.
மேலும் ரோஹித் ஷர்மா டக்ளர் கொடுக்கும் போது கோவமாக இருப்பது போன்று தெரிந்தது. இது தொடர்பான வீடியோ அதற்கு பிறகு வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. அப்படிப்பட்ட நிலையில் தான் போட்டி முடிந்ததும் பேசிய ரோஹித் ஷர்மா இந்த விஷயம் குறித்தும் தான் ஏன் அப்போது டக்ளர் செய்தேன் என்பது குறித்தும் பேசியிருந்தார்.
— Nihari Korma (@NihariVsKorma) July 15, 2023
ரோஹித் ஷர்மா கூறியது :
நான் இந்த போட்டியில் செய்வதற்கு முன்பாக மைத்தனத்தில் விளையாடி கொண்டிருந்த இஷான் கிஷான் மற்றும் ரோஹித் ஷர்மாவிடம் இன்னமும் ஒரு ஓவர் மட்டுமே இருக்கிறது என்று கூறினேன். இஷான் கிஷான் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் இறங்கி ரன் அடிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன் அதற்கு பிறகு தான் நான் டிக்ளர் கொடுக்க முடியும் என்று அவரிடம் நான் கூறினேன்.
Rohit Sharma said, "I just wanted Ishan Kishan to get off the mark and get his first runs in Test cricket and then we'd declare". pic.twitter.com/I3Vjeodbhq
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 14, 2023
எனக்கு தெரியும் இஷான் கிஷான் பேட்டிங் செய்ய மிகவும் மிகவும் ஆர்வமாக இருப்பார் என்று. இதனை நான் பல காலம் பார்த்து வருகிறேன். ஒருவேளை நான் இந்த போட்டியில் டக்ளர் கொடுத்தது அவருக்கு வெறுப்பை தந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்றார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் இஷான் கிஷான் 19 பந்துகள் ஆடிய நிலையில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை. அதற்கு பிறகு ரோஹித் ஷர்மா பெவிலியனில் இருந்து கைகை காட்டினார். அதனை தொடர்ந்து இஷான் கிஷான் தன்னுடைய முதல் டெஸ்ட் ரன்னை அடித்தார். ஆனால் 1 ரன் மட்டுமே அவர் எடுத்த நிலையில் இந்திய அணியானது டக்ளர் செய்தது. இருந்த போதிலும் ஒரு விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் சிறப்பாகவே செயல்பட்டார் என்பதை மறுக்க முடியாது.





