ஐபிஎல் 2023 தொடரானது நிறைவடைந்த நிலையில் உலக டெஸ்ட் சம்பியன் ஷிப் இறுதி போட்டிக்காக உலகமே இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைத்தனத்தை உற்று நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு கரணம் உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணிகளான ஆஸ்திரேலியாவும், இந்தியாவுக்கு இடையே நடைபெறுவதினால் தான். இந்நிலையில் வரும் 7ஆம் தேதி நாளை முதல் 11 ஆம் தேதி வரையில் டெஸ்ட் போட்டியானது நடைபெற இருக்கிறது.

இந்த போட்டி இரு நாடுகளையும் தவிர்த்து இங்கிலாந்து மண்ணில் நடக்க இருப்பதினால் இரு அணிகளுக்கும் இது சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இங்கிலாந்தில் பருவநிலை மற்றதை கணிக்க கடினமாக இருப்பதினால் இது தற்போது அனைவரின் மத்தியிலும் பேசப்படுகிது. அப்படிப்பட்ட நிலையில் தான் இதுகுறித்து ரோஹித் ஷர்மா உலகக்கோப்பை சாம்பியன் ஷிப் போட்டிக்கு முன்னதாக பேசியுள்ளார்.
ரோஹித் ஷர்மா கூறியது :
அவர் கூறுகையில் “இங்கிலாந்து மைத்தனத்தை பொறுத்தவரில் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். நாம் எவ்வளவு இந்த சூழ்நிலைக்கு தயாராகிறோமோ அவ்வளவு நல்லது. 2021 இல் நான் உணர்ந்த ஒரு விஷயம், நீங்கள் ஒருபோதும் இங்கு செட் ஆகிவிட்டோம் என்று என்ன கூடாது. ஏனென்றால் வானிலை மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே தொடர்ந்து நீங்கள் அதிக நேரம் கவனத்துடன் இருக்க வேண்டும், அதற்கு பிறகு உங்களுக்கே இந்த பௌலர்களின் பந்துகளை அடிக்கலாம் என்று எண்ணம்

தோன்றும்.
முக்கியமாக உங்களுடைய பலம் எது என்று தெரிந்து கொள்ள வேண்டும். நான் வெற்றிக்காக நல்ல வீரர்களை வெற்றிகரமாக செயல்பட வைக்க முயற்சி செய்ய போகிறேன். மேலும் ஓவல் மைதானத்தில் ஸ்குயர் பாவுண்டரிகள் வேகமாக இருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். என்றார் ரோஹித் ஷர்மா
மேலும் பேசிய அவர் “வீரர்கள் பல வகையான கிரிக்கெட்டில் விளையாடுகின்றனர். இதனால் நேரடியாக டெஸ்டிற்கு வருவது கண்டிப்பாக சவாலா இருக்கும். பல வகையான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது உகளுடைய விளையாடும் நுட்பத்தை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இதனை பல இளம் வீரர்கள் சாரியாக செய்வதில்லை. எங்களை போன்ற மூத்த வீரர்கள் இதனை சரியாக செய்து வருகிறோம் என்றார் ரோஹித் ஷர்மா.





