இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு 5வது ஐபிஎல் கோப்பையை வென்றது. இதன் மூலம் 5முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது சென்னை. இப்படிப்பட்ட நிலையில் தான் மும்பை அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா குறித்து முன்னாள் பாகிஸ்தானிய வீராரும் முன்னாள் டெஸ்ட் கேப்டனுமான சல்மான் பட் கருத்து தெரிவித்துள்ளார்.

சால்மன் பட் தன்னுடைய யூடியூப் சேனலில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கும் போது தோனி மற்றும் ரோஹித் சர்மாவின் ஒப்பிட்டு பேசுமாறு பார்வையாளர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் இருவருக்கும் இந்த உலகம் அளவிற்கு வித்தியாசம் இருக்கிறது. ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. அவர் தற்போது இந்தியாவின் கேப்டன். அவர் அனைத்து அம்சங்களிலும் முன்மாதிரியாக அணியின் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். உடற்தகுதி அவற்றில் மிக முக்கியமான அம்சமாகும்.
ஒரு கேப்டனாக நீங்கள் ஒரு அணியில் இருக்கும்போது உங்கள் அணி வீரரிடம் ஒன்றை எதிர்பார்க்கும் போது, அதனை முதலில் நீங்கள் வைத்திருக்க வேண்டும். நீங்கள் வீரர்களுக்கு முன்மாதிரியாக முதல் இடத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு ரன்களும் கிடைக்கும், உங்களுடைய ஆட்டம் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். அது மற்றவர்களுக்கும் ஊக்கம் கொடுத்து அவர்களையும் சிறப்பாக செய்லபட ஊக்குவிக்கும்.

ஆனால் ரோஹித் சர்மாவைப் பார்க்கும்போது, உடற்தகுதி என்பதில் அவர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். நாம் இப்போது நீண்ட காலமாக அதைப் பற்றி பேசுகிறோம். அவர் ஏன் போதுமான தகுதி இல்லை என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கான காரணத்தை அவரே அறிந்திருக்கலாம் என்று கூறினார் சல்மான் பட்.
இவர் கூறுவதை ஒரு வகையில் யோசிக்க வேண்டிய ஒன்றுதான் ஏனென்றால். ரோஹித் ஷர்மா இந்த ஐபிஎல் போட்டி மட்டுமல்லாமல் கடந்த ஐபிஎல் போட்டியிலும் சரியாக செயல்படவில்லை. மைதானத்திலும் ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கிறார். மறுபுறம் தோனி உடற்தகுதியில் இன்னமும் சரியாக இருக்கிறார். அவர் விக்கெட்டுகளை இடையே ஓடுவதில் இருந்து மின்னல் வேக ஸ்டாம்பிங் வரையில் சிறந்து விளங்குகிறார்.
மேலும் அவருடைய கேப்டன்சியும் சிறப்பாக இருப்பதினால் தான் ஐபிஎல் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். அதோடு தோனிக்கு வரும் ஜூலை மாதத்தோடு 42 வயது ஆக இருக்கிறது. இருந்த போதிலும் கிரிக்கெட் மைதானத்தில் பல மந்திரங்களை காட்டுகிறார். ஆனால் ரோஹித் இப்படி ஒரு பிடிப்பு இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ரோஹித் தன்னுடைய உடற்தகுதியை மேம்படுத்துவது சிறந்தது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.





