உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியானது முடிவடைந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. ஆனால் கடந்த டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியின் காரணமாக சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்துள்ளார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்ஃப்ராஸ் கான் இந்த அணியில் இடம்பெறவில்லை.

இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் சர்ஃப்ராஸ் கான் கடந்த ரஞ்சி ட்ராபி கிரிக்கெட்டில் 6 போட்டிகளில் 556 ரன்களும் சராசரியாக 92.66 வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல் தர கிரிக்கெட்டில் சர்ஃப்ராஸ் கான் 3505 ரங்களும் சாராரையாக 79.65 ரங்களுடன் 13 சதங்களும், 9 அரை சதங்களும் அடித்துள்ளார். இருந்தும் இவர் வெஸ்ட் இடீண்ஸ் தொடரில் இல்லாதது பலரது விமர்சனத்திற்கு உள்ளானது.
சர்ஃப்ராஸ் கான் குறித்து கவாஸ்கர் :
அபப்டிப்பட்ட நிலையில் இந்த நிலைமை குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார் . அவர் கூறுகையில்” சர்ஃப்ராஸ் கான் கடந்த மூன்று சீசன்களிலும் திறமையாக விளையாடி 100 ரன்கள் சராசரியாக வைத்திருக்கிறார். அப்படி இருக்க அவரை அணியில் எடுக்காதது ஏன்? அவரை விளையாடும் ப்ளெயின் 11ல் எடுக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் நீங்கள் அவரில் அணியிலேயே எடுக்கவில்லை. அவரிடம் சென்று சொல்லுங்கள் உங்களுடைய திறமை அங்கீகரிக்கப்படுகிறது என்று.

அப்படியில்லை என்றால் ரஞ்சி ட்ராபி விளையாடுவதை நிறுத்தி விடுங்கள், அதனால் எந்த பயனும் கிடையாது. ஐபிஎல் போட்டியில் இனனித்து விளையாடினால் மட்டுமே போது உங்களினால் டெஸ்ட் கிரிக்கெட் ஆட முடியும் என்று சொலுங்கள் என இந்திய அணியின் தேர்வு குழுவை விமர்சித்து பேசினார் சுனில் கவாஸ்கர்.மேலும் ஐபிஎல் போட்டிகளில் சிறபபிக செயல்பட்ட அக்சர் படேமற்றும் சுப்மன் கில் பறி பேசிய சுனில் கவாஸ்கர்.

வருங்கால கேப்டன் :
அவர் கூறுகையில் “இவர்கள் இருவரும் இந்தியாவின் வருங்கால கேப்டனாக வரலாம் என்று நினைக்கிறன் என்றார். ஏனென்றால் அக்சர் படேல் அணியுடன் இணைத்து செயல்படுகிறார். ஒவ்வொரு போட்டிகளிலும் அவருடைய திறமை எதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இப்போது அவருக்கு துணை கேப்டன் பொறுப்பை வழங்குவது அவர்களை சிந்திக்க வைக்கும். எனவே எனது பார்வையில் இவர்கள் இருவர்தான் வேட்பாளர்கள் என்றார் கவாஸ்கர்.
அதோடு தற்போது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டுவரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷான் அவருடைய இடத்தை தக்க வைத்து கொண்டால் வரும் இந்த கணக்கில் வரலாம் என்றார்.





