இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக் குழு, ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பல வடிவத் தொடருக்கான அணிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த தொடையில் இந்திய அணியின் இடம்பெற்ற முக்கிய வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜடேஜா, சுப்மன் கில் போன்றவர்கள் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுத்திருக்கலாம் என்ற கருத்து நிலவியது.

ஏனென்றால் டந்த சில மாதங்களாகேவே இந்திய அணிக்கும் வீரர்களுக்கு தொடந்து போட்டிகள் இருந்து கொண்டே இருந்து. இதனால் சுழற்சி முறையில் வீரர்களுக்கு போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. கடந்த டி20 உலககோப்பிக்கு பிறகு நவம்பர் மதம் நியூஸிலாந்து சுற்றுப்பயணம். பங்களாதேஷுக்கு எதிரான போட்டி, ஜனவரி மாதத்தில் இலங்கை மற்றும் நியூஸிலாந்திற்கு எதிரான போட்டி, பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி.
அதுமட்டுமல்லாமல் கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் 2023 சீசன் என இடைவிடாது விளையாடிய இந்திய அணியின் வீரர்கள் பலர் தற்போது 2023 உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாட என தொடர்ந்து இந்திய வீரர்கள் விளையாடுவதினால் அவர்களுக்கு ஓவி என்பதே கிடைக்க வில்லை. இப்படிப்பட்ட இந்தியாவில் இந்தியாவிற்கு எதிராக பல போட்டி கொண்ட தொடரில் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த அணியின் ஆச்சரியம் அளிக்கும் வகையில் சில முக்கியமாக வீரர்கள் இடம் பெறவில்லை. அதற்கு காரணமாக கூறப்படுவது வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது உலக கோப்பை தகுதி சுற்றில் விளையாடி வருகிறது. இதனால் முக்கிய வீரர்கள் இந்த தொடரில் வெற்றிபெற முனைப்பு கடுமையாக விளையாடி வருகின்றனர். இதனால் வரும் ஜூலை மாதம் நடக்க இருக்கும் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் இவர்கள் கலந்து கொள்வது என்பது கடினமான ஒரு காரியம்.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரர்களான ஜேசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ், அல்ஜாரி ஜோசப் போன்ற வீரர்கள் இந்தியாவிற்கு எதிரான அணியில் இடம்பெறவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார் வீரர்கள் ” தேஜ்நரேன், கார்ன்வேல், கவும் ஹட்ஜ், ஜோஸ்வா டி சில்வா, ஆதனஸ், கிராஜ் பிராத்வெயிட், ஸ்கிம் கோடான், மெக்கன்சி, மின்டலே, மெக் ஆலிஸ்டர், ஆண்டர்சன், ரெய்பர், ஜேமால் வாரிக்கன், ஜேடன் சீல்ஸ் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.





