வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் 2023 தொடரானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 1 போட்டியில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டி டிராவான இந்நிலையில் இந்த போட்டி இரண்டு அணிகளுமே மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் இங்கிலாந்து அணியின் லெஜெட் வீரரான ஸ்டூவர்ட் பிராட் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் தான் அவருடைய தாய் கரோல் பிராட் தன்னுடைய மகன் ஓய்வு குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் ” நாங்கள் இன்று வெற்றிபெற விரும்புகிறோம். காலையில் எங்களுக்குத் தெரியும், இருந்த போதிலும் எங்களின் உதடுகள் சீல் செய்யப்பட்டன. ஆனால் நேற்று ஒரு சிறந்த பேட்டிங் நாளாக இங்கிலாந்து அணிக்கு இருந்தது, அதனால் நான் அவர்களின் மீது கவனம் செலுத்தினேன். நிச்சயமாக உங்களிடம் உரையாடல்கள் உள்ளன ஆனால் ஸ்டூவர்ட் சரியான முடிவை எடுப்பதில் வல்லவர், அவர் அதை மீண்டும் செய்துள்ளார் என்றார் ஸ்டூவர்ட் பிராட் தாய் கரோல் பிராட்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் ” தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்ட அவர் இங்கிலாந்துக்காக விளையாடுவதற்காக தனது மகன் களத்தில் இறங்கும் போதெல்லாம் தனக்கு நடுக்கம் ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும் தங்களுடைய வெற்றிபெறுவதை பார்க்க ஆசை என்று அவர் கூறியிருந்தார்.

ஆகஸ்ட் மாதம் 2006 28ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான T20I போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார் ஸ்டூவர்ட் பிராட். இங்கிலாந்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போட்டியில் அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு வருடம் கழித்து 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங்கின் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசினார் அது இவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

இருந்த போதிலும் கடுமையாக உழைத்த அவர் டிசம்பர் 9, 2007 அன்று இலங்கைக்கு எதிராக அவர் தனது புகழ்பெற்ற டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் 2015 ஆஷஸ் தொடரில் 9.3 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று பாதகங்களில் இடம் பிடித்தார்.
மேலும் ஸ்டூவர்ட் பிராட் ஆஷஸ் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்று வரலாற்று புத்தகங்களில் தன்னுடைய பெயரை பொறித்தார். ஆஷஸில் 40 போட்டிகளில் 29.03 என்ற சராசரியில் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுளார். அதுமட்டுமல்லாமல் ஆஷஸ் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை ஒரு போட்டியில் வீழ்த்தியவர் என்ற பட்டியலிலும் 3 வது இடத்தில் இருக்கிறார் ஸ்டூவர்ட் பிராட்.





