இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அணியானது எல்லா போட்டிகளிலும் சிறந்த அணியாக இருந்தது. சொல்லபோனால் தோனிக்கு பிறகு கேப்டனாகிய விராட் கோலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார் என்றே சொல்லலாம். குறிப்பிடதக்க வகையில் அஸ்திரரேலியா, இங்கிலாந்து போன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அவர்கள் மண்ணிலேயே வென்று வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்தார்.

ஆனாலும் விராட் கோலியினால் இரண்டு வகையான உலக கோப்பைகளையும் வெல்ல முடியவில்லை. இதனால் அவருக்கு பதிலாக அப்போது சிறப்பான பார்மில் இருந்த ரோஹித் ஷர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து சில போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றாலும் முக்கியமான போட்டிகளில் பெரும் தோல்வியை சந்தித்தது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இந்தியா என்னதான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளிடம் நல்ல வெற்றியை பதிவு செய்தலும் முக்கியமான நேரமான நாக் அவுட் நேரத்தில் பல முறை பெரிய தவறுகளை செய்து தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் பேட்டருமான சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பற்றி அதிக விமர்சனங்களையும் கேள்விகளையும் வைத்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்தில் பேசிய கவாஸ்கர், நவீன இந்திய கேப்டன்கள் அனுபவிக்கும் பாதுகாப்பைப் பற்றிப் பேசினார். மேலும் அணி தோல்வியைத்தலும் எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல் அவர்கள் எப்படித் மீண்டும் தொடர அனுமதிக்கப்பட்டார்கள் என்பதை பற்றி விமர்சித்தார். இந்நிலையில் தான் தோனி மற்றும் ரோஹித் ஷர்மாவை ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.
சுனில் கவாஸ்கர் பேட்டி :
அவர் கூறுகையில் “நாம் தோல்வியடைந்தது இப்பொதுமட்டுமல்ல முன்பே நடந்திருக்கிறது. நம்முடைய அணி வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் கேப்டன் என்பவர் மாற்றப்படவில்லை. இது இப்பொதுமட்டுமல்ல அதனை உங்களுக்கு நான் நியாபக படுத்துகிறேன். இது கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. ஒரு முறை கூட இந்தியா தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 0-4, 0-4 என பெரும் தோல்வியை தழுவியது.

ஆனால் இந்த தோல்விக்கு பிறகும் கேப்டன் என்பவர் மாற்றப்படவில்லை என்ற்றும். இப்போது ரோஹித் தோல்வியடைந்தால் மட்டும் குற்றமா என்ற கேள்வியை சுனில் கவாஸ்கர். இந்நிலையில் கவாஸ்கர் குறிப்பிடுவது கடந்த 2011\12 தொடராக இருக்கலாம். அப்போது தோனி தலைமையில் இந்திய அணியானது அஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு சுற்றுப்பயணம் சென்றது. ஆனால் இரண்டு அணிகளிடமும் தோல்வியை தழுவியது. இதனால் கவாஸ்கர் தொனியுடன் ஒப்பிட்டுக்கு பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.





