வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பல போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியாக 2 டெஸ்ட் போட்டிகள் நடந்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டியானது டிராவனது. இதனால் இருந்தாலும் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் கோப்பபையை வென்றது. இப்படிபட்ட நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இது குறித்து பேசியுள்ளார்.

சுனில் கவாஸ்கர் பேட்டி :
அவர் கூறியதாவது “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா மற்றும் மற்றும் விராட் கோலி ரன்களை குவித்தார்கள். என்னுடைய கேள்வி என்னவென்றால் இதிலிருந்து தேர்வர்கள் என்ன கற்றுகொண்டார்கள். இது அவர்களுக்கு முன்னரே தெரியாத?. இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை விளையாட வைத்து அவர்களினால் டெஸ்ட் போட்டிகளை எப்படி அணுக முடிகிறது என்று பரிசோதித்திருக்கலாம்.
அப்படி இல்லை என்றால் இளம் வீரர்களால் தற்போது இருக்கும் வீரர்களுக்கு ஏதேனும் நெருக்கடி வந்துவிடக் கூடாது என்று தேர்வு குழு பார்த்து கொள்கின்றனர்னரா? என்றும் கவாஸ்கர் கடுமையாக சாடினார். மேலும் பேசிய அவர் கூறுகையில் தற்போது அஜித் அகர்கர் தலைமை தேர்வாளராக வந்திருக்கிறார். அவருடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அவர் எதிர்கால இந்திய அணியை தேர்வு செய்வாரா அல்லது பழைய கதையே தொடருமா என்று நாம் பார்க்க வேண்டும். மேலும் பேசிய அவர் இந்திய அணி மணப் பெண்ணில் தோழியாகவே இருந்து வருகிறது மணப்பெண்ணாக இல்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்த விராட் கோலி குறித்து பேசிய அவர் கோலி தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பதை தவற விட்டார். ஆனால் பின்னர் இரண்டவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சதம் அடித்தார்.

இது அவருடைய திறமையை மட்டுமே காட்டவில்லை எங்கு ரன்களை அடிக்க முடியும் என்று மைதானத்தை புரிந்து கொள்ளும் திறனையும் காட்டுகிறது. பொதுவாக பேட்ஸ்மேனுக்கு இரண்டு கண்டங்கள் இருக்கிறது. ஓன்று போட்டியானது ஆரம்பிக்கும் போது தன்னுடைய கால் அசைவு, மைத்தனத்தின் தன்மை பற்றி வரும். இரண்டாவது அரை சதம் அடித்த பிறகு அவர்களுடைய சிந்தனை கொஞ்சம் தவறியிருக்கும் அப்போது வரும்.
மூன்றாவது 90 ரன்கள் அடித்த பிறகு சதம் அடிக்க வேண்டும் ஒரு நெருக்கடி வரும். நான்காது சதம் அடித்த பிறகு நாம் தான் சதம் அடித்து விட்டோமே என்ற எண்ணம் வரும். இதனை தவிர்க்க 50 அல்லது 100 ரன்களை அடித்த பிறகு கொஞ்சம் நேரம் நான் ஸ்ட்ரைக்கர் பக்கத்தில் இருந்து அழுத்தம் குறைந்து குழப்பம் தீர்ந்தவுடன் விராட் கோலிக்கு இது அனைத்துமே தெரியும் என்றார் விராட் கோலி.





