சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய அணியானது ஆஸ்திரேலியாவிடம் பெரும் தோல்வியை சந்தித்தது. சொல்லபோனால் இந்திய வீரர்களினால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்கவே முடியவில்லை. இதை ரஹானே மட்டும் கொஞ்சம் தாக்குபிடித்தலும் விராட், ரோஹித், புஜாரா, சுப்மன் கில் உள்ளிட்டோர் மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள்.

இதனால் இந்திய அணியானது 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ரோஹித் ஷர்மா தங்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாடுவதற்கு முன்னர் தயாராக 20 முதல் 25 நாட்கள் இருந்திருந்தால் சரியாக தயாராயிருப்போம் என்றார். இப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கவாஸ்கர் பேட்டி :
நாம் எந்த வகையான போட்டிக்கு தயாராகுவை பற்றி பேசுகிறோம்? இப்போது அவர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் விளையாட சென்றுள்ளனர். உங்களுக்கு முன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் உதாரணம் உங்களிடம் உள்ளது. இதற்கு முன்னர் நீங்கள் வேறு ஏதேனும் போட்டிகளில் விளையாடுகிறீர்களா? அப்படி இருக்க 20-25 நாட்கள் இருந்தால் தயாராகியிருப்போம் என்பது பற்றி என்ன பேச்சு.

இன்று இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நீங்கள் டெஸ்ட் போட்டிக்கு ஒரு நாள் முன்பு சென்றாலே அவர்களை வெற்றிபெறலாம். ஆனால் நீங்கள் உங்களை தயார் படுத்துவது பற்றி பேசும்போது உண்மையாக இருங்கள். போட்டிக்கு 15 நாட்களுக்கு முன்னர் அங்கு சென்று 2 பயிற்சி போட்டிகளை விளையாடிவிட்டு பின்னர் முக்கிய வீரர்கள் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம். ஆனால் அணியில் இடம்பெறாமல் தயார் நிலையில் இருக்கும் வீரர்களுக்கு எங்கு பலவீனம் இருக்கிறதோ அதனை சரி செய்ய முயற்சி செய்யலாம் என்றார் கவாஸ்கர்.
மேலும் அவர் பேசுகையில் ” உண்மை என்னவென்றால், முக்கிய வீரர்கள் உலக கோப்பை டெஸ்ட் இறுதி போட்டிக்கு முன்கூட்டியே செல்ல விரும்பவில்லை, ஏனென்றால் என்ன வந்தாலும் அவர்கள் அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். சீக்கிரம் போனால் வேலைப்பளுவைப் பற்றிப் பேசுவார்கள். உங்களை உலகின் மிகச்சிறந்த என்றும் முந்தைய தலைமுறைகளை விட உடற்தகுதியில் வலுவாக இருக்கிறீர்கள் என்று கூறுகிறீர்கள்.
பிறகு எப்படி அந்த போட்டியில் அவ்வளவு சீக்கிரம் விக்கெட்டுகளை விட்டீர்கள்? நீங்கள் 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடும்போது உங்களுக்கு எப்படி பணிச்சுமை பிரச்சனை ஏற்படுகிறது? என்றும் கவாஸ்கர் கேள்வி எழுப்பினர். குறிப்பிடதக்க வகையில் இந்திய அணியின் பல வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிக்கு சில நாட்களுக்கு முன்னர் தான் ஐபிஎல் போட்டி முடிந்து வந்தார்கள் இந்த காரணத்தினால் இந்தியாவிற்காக வில்லிடும்





