இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக் குழு, ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பல வடிவத் தொடருக்கான அணிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் அணியின் வீரர்கள் தேர்வு குழுவை கடுமையாக சாடியுள்ளார். இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜடேஜா, சுப்மன் கில் போன்றவர்கள் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.

அதவாது கடந்த சில மாதங்களாகேவே இந்திய அணிக்கும் வீரர்களுக்கு தொடந்து போட்டிகள் இருந்து கொண்டே இருந்து. இதனால் சுழற்சி முறையில் வீரர்களுக்கு போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. கடந்த டி20 உலககோப்பிக்கு பிறகு நவம்பர் மதம் நியூஸிலாந்து சுற்றுப்பயணம். பங்களாதேஷுக்கு எதிரான போட்டி, ஜனவரி மாதத்தில் இலங்கை மற்றும் நியூஸிலாந்திற்கு எதிரான போட்டி, பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி.
அதுமட்டுமல்லாமல் கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் 2023 சீசன் என இடைவிடாது விளையாடிய இந்திய அணியின் வீரர்கள் பலர் தற்போது 2023 உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாட என தொடர்ந்து இந்திய வீரர்கள் விளையாடுவதினால் அவர்களுக்கு ஓவி என்பதே கிடைக்க வில்லை இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த மாதத்திற்குப்பிறகு மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட இருக்கின்றனர்.

இது குறித்து முன்னாள் இந்திய அணியின் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் “அவர் கூறுகையில் “உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியானது தற்போது முடிந்து விட்டது. அந்த அற்புதமான வாய்ப்பை நாம் தவறவிட்டுவிட்டோம். இதனையடுத்து பெரிய போட்டியான ஒருநாள் உலகக்கோப்பை வரும் ஆக்டோபர் மாதம் நடக்க இருக்கிறது.
இந்த சமயத்தில் நம்முடைய பெரிய வீரர்களுக்கு வரும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு கொடுத்திருக்கலாம். மேலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டை மட்டுமே எதிர்நோக்கி, சிகப்பு பந்தை தவிர்த்திருக்கலாம். முக்கியமாக உலகக்கோப்பை விளையாடும் வீரர்களுக்கு முழுமையான ஓய்வு கொடுத்திருக்கலாம். ஏனென்றால் கடந்த 3 முதல் 4 மாதங்களாக தொடர்ந்து இடைவெளி இல்லாமல் அவர்கள் விளையாடி வருகின்றனர். எப்போதாவதுதான் ஓய்வும் கிடைத்திருக்கிறது என்றார் சுனில் கவாசகர்.
மேலும் அவர் பேசுகையில் “இந்திய அணியில் இருக்கும் பெரிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து, அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட வைத்திருந்தால் அது பெரிய நன்மையாக இருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி செய்யவில்லை. நாம் கிடைத்த நல்ல வாய்ப்பை தவற வவிட்டுவிட்டோம் என்று எனக்கு தோன்றுகிறது என்று கூறினார் சுனில் கவாஸ்கர்.





