ன்னாப்பிரிக்கா எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் விராட் கோலி தனது வழக்கமான நோக்கத்துடன் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியை டி20 போட்டியில் தொடரை சமன் செய்து இருந்ததாலும் ஒரு நாள் போட்டியை 2-1 என்று தொடரை கைப்பற்றி இருந்தந்து. அதன் பின் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இன்று முதல் போட்டியை விளையாடியது.

முதல் ஆட்டம் செஞ்சூரியனில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்பார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த நேரத்தில் அவர் ஏமாற்றத்தையே அவ அளித்து இருந்தார். இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி விளையாடி வருகின்றது. இந்திய அணி இதற்க்கு முன்பாக 31வருடங்களாக தென்னாபிரிக்காவில் சென்று அங்கு தொடரையும் வென்றது இல்லை.

இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன் படி அது அவர்களுக்கு சிறப்பாகவே அமைந்து இருந்தது. தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. இந்திய அணி முதல் நாள் முதல் செஷன் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 91 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளிக்க முடியவில்லை.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில் ராபாடாவிடம் ஆட்டமிழந்தார். அவர் சென்ற பின் ஜெய்ஸ்வால் 17 ரன்னிலும், கில் 2 ரன்னிலும் வெளியேற அதன் பின் நிதானமாக விளையாடி இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்னிலும் அவருடன் மற்றொரு பக்கம் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த கோலி 38 ரன்னிலும் அஷ்வின் 8 ரன்னிலும் ஷர்துல் தாக்கூர் 24 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறியே வந்தது.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ராபாடா 5 விக்கெட்டுகளையும் பர்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை திணற வைத்தனர். தற்போது இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே அடித்துள்ளது. தற்போது இரு அணிகளும் டீ இடைவெளியில் இருகின்றது. இந்திய அணி அதன் பின் வந்து சிறப்பாக விளையாடுமா என்பது பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.





