முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரரான வாசிம் அக்ரம் ஆஸ்திரேலிய அணியின் வீரரான பாட் கம்மின்ஸ் செயல்திறன் பற்றியும் அவருடைய கேப்டன்சி பற்றியும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். ஆஸ்திரலிய அணிக்கு பாட் கம்மின்ஸ் கேப்டனான பிறகு பல சிறப்பான வெற்றிகளை இவர் பெற்று தந்திருக்கிறார். குறிப்பிடதக்க வகையில் இவரது தலைமையிலான ஆஸ்திரேலியா அற்புதமாக உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாடி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதன் மூலன் அணைத்து சர்வதேச கோப்பைகளையும் வென்ற அணி என்ற சாதனையையும் படைத்து.

உலா கோப்பை டேஸ் சாம்பியன் ஷிப் போட்டியை முடிந்து கொண்டு ஆஷஸ் தொடரில் தற்போது இங்கிலாந்தில் விளையாடிவரும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தை வீழ்த்தி முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் இந்த போட்டியின் வெற்றிகளுக்கு கேப்டன் பாட் கம்மின்ஸ் முக்கிய பங்காற்றினர். முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல் திரில்லிங் வெற்றியையும் பெற்று தந்தார்.
அதே போன்று இரண்டாவது போட்டியில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆனால் 3வது போட்டியில் இங்கிலாந்து அணியானது சிறப்பாக விளையாடி வெற்றி கண்டது. இருந்த போதிலும் இந்த தொடரை வெல்ல இன்னமும் 1 போட்டி மட்டுமே ஆஸ்திரேலியாவிற்கு தேவைப்படுகிறது. ஆனால் இங்கிலாந்திற்கு 2 வெற்றிகள் தொடர்ந்து வேண்டும். இதனிடையே இப்படி இங்கிலாந்தை அவர்களது சொந்த மண்ணில் நிலைதடுமாற வைத்த பாட் கம்மின்ஸ் கேப்டன்சியை பலர் போராடிவரும் நிலையில் தான் முன்னாள் பாஸ்கிதான் அணியின் வீரரான வாசிம் அக்ரம் கருத்து கூறியுள்ளார்.

பாட் கம்மின்ஸ் பற்றி வாசிம் அக்ரம் :
அவர் கூறியதாவது “பந்துவீச்சாளர்கள் நல்ல கேப்டன்களாக இருக்க முடியாது என்ற காரணத்தை தவறு என்பதை நிரூபித்து காட்டிவிட்டார் பாட் கம்மின்ஸ். எனக்கு தெரிந்து ஆஸ்திரேலிய கேப்டனான பாட் கம்மின்ஸ் மிகவும் அசாதாரணமாக விளையாடி வருகிறார். நானா அவருடன் 6 அல்லது 7 வருடங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் வேலை செய்திருக்கிறேன். ஒரு மைத்தனத்திலும் சரி, மைத்தனத்திற்கு வெளியேவும் சரி சிறந்த கேப்டனாக இருப்பர்.

மிகவும் அடக்கமான ஒரு மனிதர், அதே நாளேயே அணிக்கு அவரை மிகவும் பிடிக்கும். எப்போதுமே தன்னுடைய முகத்தில் மகிழ்ச்சியையும், தன்னை சுற்றி நம்பிக்கையையும் அணியின் வீரர்களுக்கு செலுத்தும் ஒரு நல்ல கேப்டன் என்றார் வாசிம் அக்ரம். பவுலர்கள் சிறந்த கேப்டனாக இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன், ஏனெனில் அவர்கள் தங்கள் பந்துவீச்சாளர்களை எவ்வாறு கையாள்வது என்பது அவர்களுக்குத் நன்றாகவே தெரியும்.
ஒரு பேட்டிங் கேப்டன் உங்கள் ஸ்பெல்லுக்கு கூடுதல் ஓவரைக் கொடுக்கலாம், அல்லது நீங்கள் நாள் முழுவதும் விளையாடாமலும் இருக்கலாம். ஆனால் ஒரு பந்துவீச்சாளராக இந்த பந்துவீச்சாளர் இரண்டு நான்கு ஓவர் ஸ்பெல்களை வீசுவதற்கு போதுமானவர் என்பதை அறிந்து கொள்ள முடியும். எனவே அந்த விஷயத்தில் பாட் கம்மின்ஸ் நல்ல கேப்டனாக இருக்கிறார் என்றார் வாசிம் அக்ரம்.





