இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான காயத்தின் காரணமாக, மூத்த வீரரான அஜிங்க்யா ரஹானே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. அதற்கு முன் அவர் ரஞ்சி டிராபியிலும், ஐபிஎல் 16வது போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் தற்போது ரஹானேவின் ஃபார்ம் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஏனென்றால் ரஹானே WTC இறுதிப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டார், அதன் அடிப்படையில் தேர்வுக் குழு அவரை மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான துணைக் கேப்டனாக நியமித்தது. ஆனால் மீண்டும் ரஹானே மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் சிறப்பாக செயல்பட தவறி விட்டார். இதனால் மேற்கொண்டு விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் தான் வாசிம் ஜாபிர் ரஹானே குறித்து பேசியுள்ளார்.
ரஹானே குறித்து வாசம் ஜாபர் :
ரஹானே தனது ஆட்டத்தில் நிலைத்தன்மையைக் காட்ட வேண்டும், அவர் 80-90 (84) டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அப்படி இருந்தாலும் அதுவே அவரது பிரச்சினையாக உள்ளது. அவருடைய நிலைத்தன்மை ஒரு பிரச்சினையாக உள்ளது. அவர் அதை சமாளிக்க வேண்டும், ஏனெனில் ரோஹித் ஷர்மா கேப்டன்சியில் இருந்து விலகினால் அவருக்கு பிறகு ஒரு நல்ல கேப்டனாக ரஹானேவிற்கு வாய்ப்பு இருக்கிறது.

எனவே பொறுப்பாக விளையாடி ரஹானே ரன்களை எடுக்க வேண்டும். பின்னர் மற்ற அனைத்தும் சரியாகிவிடும் என்றார் வாசிம் ஜாபர். மேலும் ரஹானே கேப்டன்சி குறித்து பேசிய அவர் “ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான பிறகு, அந்த தொடரில் ரஹானே மிகவும் சிறப்பாக வழிநடத்தி வெற்றியை பெற்றுத்தந்தார். அதோடு அவரின் ஃபார்ம் மிகவும் சிறப்பாக இருந்திருந்தது.

மேலும் அந்த தொடரில் மெல்போர்னில் ரஹானே சதம் அடித்த விதம். அதே போல அவருடைய விளையாட்டு இருந்தது என்றார் இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் கேப்டன் ரஹானேவாகத்தான் இருந்திருப்பார். ஆனால் அவர் அதற்கு பிறகு தனது ஃபார்மை இழந்து இந்திய அணியில் இருந்து வெளியேறினார். இருப்பினும் பின்னர் ஐபிஎல் போட்டியில் தன்னை மீண்டும் புதுப்பித்து கொண்டு WTC இறுதி வாய்ப்பைப் பெற்றார்.
மேலும் அவருக்கு துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ரஹானேவிற்கு இன்னமும் வயது இருக்கிறது என்று இந்திய அணியின் தேர்வாளர்கள் நினைத்தார்கள். ஆனால் இதில் நீடிக்க ரஹானே ரன்களை விளாச வேண்டும். அப்படி அவர் நல்ல விளையாட்டை விளையாடி ரன்களை எடுக்கவில்லை என்றார் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றார் வாசிம் ஜாபர்.





