
மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான முதல் டெஸ்டின் 2 ஆம் நாள் பேட்டிங்கில் இந்திய அணியானது மிகவும் திறமையுமாக விளையாடிது. இதற்கு முன்னதாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சில் 150 ரன்களுக்கு சுருட்டது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் எல்லா விமர்சனங்களையும் கடந்து சதம் அடித்துள்ளார்.
அவரோடு யஷஸ்வி ஜெய்ஸ்வால் திறமையாக விளையாடி தன்னுடைய முதல் போட்டியில் சதம் அடித்தது மட்டுமல்லாமல் இரட்டை சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். மேலும் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த நிலையில் ரன் மெஷின் என்று அளிக்கப்படும் விராட் கோலியும் தற்போது ஜெய்ஸ்வாலுடன் கைகோர்த்த நிலையில் இந்திய அணியானது 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 312 ரன்களை அடித்துள்ளது.
வைரல் வீடியோ :
இந்நிலையில் இந்த போட்டியின் விராட் கோலி விளையாடி கொண்டிருக்கும் போது அவருக்கு பவுடரிகளே வர வில்லை குறிப்பாக கடந்த உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தான் ஆட்டமிழந்தது போல இந்த போட்டியிலும் ஆட்டமிழக்க கூடாது என்பதற்காக விராட் கோலி மிகவும் பொறுமையாக விளையாடினார். அதுவும் பவுன்டரி வராத்தற்க்கு ஒரு காரணம் என்றே சொல்லலாம். இதனிடையே தான் விராட் கோலி தன்னுடைய 81 வது பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டர் அடித்தார்.
Calling it a night! That celebration by @imVkohli after hitting his first boundary on the 81st ball.
— FanCode (@FanCode) July 13, 2023
.
.#INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/4SjNLZCMhx
இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் அந்த பவுண்டரிக்கு பிறகு சதம் அடித்தது போன்று கொண்டாடினார் விராட் கோலி. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் இந்த கொண்டாட்டம் தான் 8500 ரன்களை கடந்த்த்ற்காகவும், இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் சேவாக் சாதனையை முயடித்ததற்காகவும் தான் கொண்டாடினர் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சொல்லப்போனால் இந்த மைத்தனமானது பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக தளமாக இருந்தது. ஏனென்றால் அவுட் பீல்ட் மிகவும் மெதுவாக இருந்ததாக அவருடன் ஆடிய ஜெய்ஸ்வால் பேட்டியில் கூறியிருந்தார். மேலும் தற்போது விராட் கோலியுடன் கைகோர்த்து ஆடிக்கொண்டிருக்கும் ஜெய்ஸ்வால் இப்படியே தொடர்ந்து ஆடினால் உலகிலேயே முதல் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை விளாசியவர் ஏற்ற பட்டம் பெறவும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது.





