மேற்கிந்திய தீவுகள் தீவுகளுக்கு இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சென்றிருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியானது சமீபத்தில் டொமேனிகாவில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஜோடி இருவரும் சதம் அடித்தனர். இதனால் இந்திய அணியானது 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது.. இந்நிலையில் கடந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் நேற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் மீண்டும் களமிறங்கினர். இந்நிலையில் இருவரும் கடந்த போட்டியில் போலவே மிகவும் அற்புதமாக விளையாடி ரன்களை குவிந்தனர். மேலும் ரோஹித் ஷர்மாவும் ஜெய்ஸ்வாலும் அரை சதத்தை மீண்டும் ஒரு முறை அடித்தனர்.
ஆனால் இடைவேளைக்கு பிறகுதான் இந்த கூட்டணி உடைந்தது. மீண்டும் அடிப்பார் என்று எதிர்பார்த்த ஜெய்ஸ்வால் ஜேசன் ஹோல்டரிடம் ஆட்டமிழக்க, அதற்கு பிறகு வந்த சுப்மன் கில் களமிறங்கினார். ஆனார் அவரும் கடந்த போட்டியில் போலவே வரும் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் சொதப்பினார். அதற்கு பிறகு சில ஓவர்களிலேயே ரோஹித் ஷாமர்மாவும், அதற்கு பிற்காடு வந்த ரஹானேவும் ஆட்டமிழக்க 181 ரன்கள் எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.

இதனையடுத்து டி பிரேக் வர கூட்டு சேர்ந்த விராட் மற்றும் ஜடேஜா ஜோடி அற்புதமாக விளையாடினார்கள். மேலும் விராட் கோலி தன்னுடைய 500வது சர்வதேச போட்டியில் அரை சதமும் விளாச நாள் முடிவில் ஜடேஜா மற்றும் விராட் கோலி ஜோடி விக்கெட்டுகள் எதுவும் விடாமல் இந்தியாவை 288 ரன்களுக்கு கொண்டு சென்றுள்ளது. தற்போது 161 பத்துகளுக்கு 87 ரன்களை அடித்துள்ள விராட் கோலி தன்னுடைய 500வது சாதனை போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
50 on 500th 👑
— FanCode (@FanCode) July 20, 2023
.
.#ViratKohli𓃵 #INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/0EuVH3Ctsb
போட்டியின் நடுவே நடந்த சம்பவம் :
இந்நிலையில் நேற்று நடந்த முதல்நாள் ஆட்டத்தில் ஒரு வித்தியாசமான ஒரு சம்பவமும் நடந்தது. அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டா சில்வா விராட் கோலியுடன் உரையாடிய சில விஷயங்களை பேசியது அங்குல ஸ்டெம் மைக்கின் மூலம் தொலைக்காட்சியில் கேட்டது. அது சம்மந்தமான வீடியோ ப்திவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த உரையாடலின் போது வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் விராட் கோலியிடம் : நீங்கள் இந்த போட்டியில் சதம் அடியுங்கள் என்று கூறுகிறார்.
அதற்கு பதில் அளித்த விராட் கோலி : என்னுடைய சதத்தினை காண நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? என்று கேட்டார்
உடனே விக்கெட் கீப்பரும் : எனக்கு தெரியும் கண்டிப்பாக நீங்கள் 100 ரன்கள் அடிப்பீர்கள் என்று கூறினார்.
அதோடு விராட் கோலியிடம் : எனது அம்மா உங்களது பேட்டிங்கை காண மைதானத்திற்கு நேரில் வருவதாக போன் செய்து சொன்னார்கள். என்னால் அதை நம்பவே முடியவில்லை நிச்சயம் அவர்களுக்காக நீங்கள் சதம் அடிக்க வேண்டும் என விராட் கோலியிடம் கேட்டுக் கொண்டார். இதுகுறித்த வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.





