உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பைனலில் டாஸை வென்ற இந்திய அணியின் ரோஹித் ஷர்மா பந்துவீச முடிவு செய்தார். ஆனால் அது தவறான முடிவு என்று அப்போதே ரசிகர்களும், முன்னாள் முன்னாள் வீரர்களும் விமர்சித்தார்கள். இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்கை ஆடிய இந்தியா 296 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு 446 ரன்கள் என்ற இமாலய இலக்கை வைத்தது. இந்த இலக்கை துரத்த களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது இன்னிங்க்கில் பெரும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி 50 ரன்களை கூட தாண்டாமல் ஆட்டமிழந்தார்கள்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கு ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சிதான் காரணம் என்று பலவிதமான கருத்துகள் ஷோசியல் மீடியாவில் பரவியது. அப்படிப்பட்ட நிலையில் தான் போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த ரோஹித் ஷர்மா தோல்விக்கான காரணம் குறித்து பேசினார்.

ரோஹித் சர்மா :
அவர் கூறுகையில் “அப்போது இருந்த சூழ்நிலையில் நாங்கள் டாஸ் வென்றது எங்களுக்கு சாதகமாக இருந்தது. இந்த மைதானத்தில் பேட்டிங் ஆடுவது கடினம் என்பதினால் முதலில் நாங்கள் பந்துவீச முடிவு செய்தோம். நாளின் போது நீங்கள் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சுலபமாக எடுத்தோம், ஆனால் இரண்டாவது நாளில் எங்களுடைய பௌலிங் எங்களுக்கு எதிரியாக மாறியது. ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் சிறப்பாக விளையாடி ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்து எங்களுக்கு தடைகளாக இருந்தார்கள்.

ஆஸ்திரேலிய அணி எங்களுக்கு வைத்த இலக்கு கடுமையானது என்று எங்களுக்கு தெரியும். ஆனால் கடைசி வரையில் நாங்கள் போராடியது மகிழ்ச்சி. கடந்த நான்கு வருடங்களும் கடுமையாக உழைத்தோம். இரண்டு இறுதிப் போட்டிகளில் விளையாடுவது எங்களுக்கு ஒரு நல்ல சாதனை. ஆனால் நாங்களும் ஒரு மைல் முன்னால் செல்ல விரும்புகிறோம். இங்கு வந்து கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் செய்ததை அவ்வளவு எளிதில் மறுக்க முடியாது. ஒரு குழுவாக சிறப்பாக விளையாடினோம்.
துரதிர்ஷ்டவசமாக இறுதிப் போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியவில்லை என்றாலும் எங்களுடைய நிமிந்து நின்றுதான் நாங்கள் போராடினோம். இந்த போட்டியின் போது ரசிகர்களின் ஆதரவு மிகவும் அற்புதமாக இருந்தது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் நாங்கள் ஒவ்வொரு ரன் எடுக்கும் போதும், ஒவ்வொரு விக்கெட் எடுக்கும் போதும் எங்களுக்காக ஆரவாரம் செய்தார்கள் என்று கூறினார் ரோஹித் ஷர்மா.




