ஐபிஎல் 2023 தொடரானது நிறைவடைந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டிக்காக உலகமே இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைத்தனத்தை உற்று நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணிகளான ஆஸ்திரேலியாவும், இந்தியாவுக்கு இடையே நடைபெறுவதினால் தான். இந்நிலையில் வரும் 7ஆம் தேதி நாளை முதல் 11 ஆம் தேதி வரையில் டெஸ்ட் போட்டியானது நடைபெற இருக்கிறது.

இந்த போட்டி இரு நாடுகளையும் தவிர்த்து இங்கிலாந்து மண்ணில் நடக்க இருப்பதினால் இரு அணிகளுக்கும் இது சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இங்கிலாந்தில் பருவநிலை மற்றதை கணிக்க கடினமாக இருப்பதினால் இது தற்போது அனைவரின் மத்தியிலும் பேசப்படுகிது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் செயல்பாடு பெரிய அளவு எதிர்பார்க்கப்படுகிறது.
சொல்லப்போனால் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி வெளியேறிய அடுத்த நாளே விராட் இங்கிலாந்திற்கு வரும் உலகக்கோப்பை டெஸ்ட் தொடருக்காக பயிற்சி செய்ய சென்று விட்டார். இதனால் முன்கூட்டியே அங்குள்ள சூழ்நிலைகளை புரிந்து விராட் கோலியால் பேட்டிங் செய்ய முடியும். அப்படிப்பட்ட நிலையில் தான் இதுகுறித்து இந்திய அணியின் முக்கியமான பேட்டர்களில் ஒருவரான விராட் கோலி உலகக்கோப்பை சாம்பியன் ஷிப் போட்டிக்கு முன்னதாக பேசியுள்ளார்.
View this post on Instagram
விரட்ட கூறியது:
ஓவல் மைதானத்தில் நிலைமைகள் சவாலானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு சமதளமான விக்கெட் கிடைக்காது, எனவே பேட்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேன் கவனமாக விளையாடினால் மற்றொருவர் சரியான ஷாட்டுகளை நேர்த்தியாக அடிக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது அனைத்தும் உங்கள் முன்னாள் இருக்கும் சூழ்நிலைக்கும் உங்களிடையே உள்ள அனுபவத்தை பொறுத்து.
இப்படித்தான் மைத்தனத்தில் விளையாடப் போகிறோம். எனவே அதைச் சரியாக செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மனநிலையுடன் நாங்கள் செல்ல முடியாது என்றார் விராட் கோலி.
இதற்கு முன்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேசுகையில் எங்களிடம் ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே உள்ளது. இது இரு அணிகளுக்கும் சவாலான இரு மைத்தனமாக இருக்கும். எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணி வெற்றி பெறும். அதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அழகு என்றார். எங்களுக்கும் ஆஸ்திரேலியாவிற்கு தங்களுடைய சொந்த நாடு என்ற எந்த சாதகமும் இல்லை. எனவே இரண்டு அணிகளும் போட்டி போடுவது சுவாரசியமாக இருக்கும் என்றார்.





