லண்டனில் உள்ள ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினை விளையாட வேண்டாம் எந்த இந்தியாவின் முடிவு குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இறுதிப்போட்டியின் 2வது நாளில் ரவீந்திர ஜடேஜாவை வெளியேற்றியதற்காக ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் நாதன் லியானையும் அவர் பாராட்டினார்.

2வது நாளில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்த நிலயில், அடுத்தாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் மோசமான தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் 2வது நாள் முடிவில் இந்தியா 151/5 என்று இருந்தது. இருப்பினும் 3வது நாளில் ஜடேஜா 51 பந்தில் 48 ரன்களில் லியோனிடம் வீழ்ந்தார். அதே நேரத்தில் ரஹானே மற்றும் தாகூர் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியாவிற்கு நம்பிக்கை கொடுத்தார்கள்.
இருப்பினும் நாள் முடிவில் 296 ரன்கள் மட்டுமே இந்தியாவினால் எடுக்க முடிந்தது. இந்நிலையில் தான் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 பந்துவீச்சாளரான அஸ்வினை நீக்கிய இந்தியாவின் தேர்வு குறித்து கங்குலி கேள்வி எழுப்பினார்.
அவர் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்றில் ஆஃப்-ஸ்பின்னர் பச்சை ஆடுகளத்தில் விளையாட முடியாது என்று யார் கூறுகிறார்கள்? ரவீந்திர ஜடேஜா மற்றும் நாதன் லயன் ஆகிய இருவரும் இடது கை பேட்டார்கள். நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். இந்த நேரத்தில் அவர் இந்தியாவின் சிறந்த பேட்டரை வெளியேற்றினார் மைதானத்தில் இருந்த டர்னயும், பவுன்சையும் பயன்படுத்தி.

மேலும் கங்குலி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா வெற்றி பெறுமென ஒப்புக்கொண்டார், ஆனால் அஷ்வின் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட்டில் இருந்து வெளியேற்றுவது கடினம் என்று கங்குலி கூறினார். அது குறித்து பேசுகையில் “இது பின்னர் வருவதை யோசிப்பதாகவும் ஆனால் எனக்கு அது போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஒரு கேப்டனாக நீங்கள் டாஸ்க்கு முன் ஒரு முடிவை எடுப்பார்கள்.

இந்தியா நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது என்று முடிவு செய்திருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர், ஆனால் நீங்கள் என்னைக் கேட்டால்… நான் கேப்டனாக இருந்திருந்தால் – ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமாக இருக்கிறார் ரோஹித்தும் நானும் வித்தியாசமாக நினைக்கிறோம் – நான் அதைக் கண்டுபிடிப்போம். அஸ்வினின் தரம் வாய்ந்த ஒரு சுழற்பந்து வீச்சாளரை லெவன் அணியில் இருந்து விலக்கி வைப்பது கடினம்,” என்று அவர் மேலும் கூறினார்.





