இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தும், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியுள்ளது இந்தியா. இதன் மூலம் வருங்கால இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களின் செயல்திறனை மேம்படுத்த முடியும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளது.

ஏனென்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல வீரர்கள் காயம் காரணமாக இந்திய அணியில் விளையாட வில்லை.குறிப்பாக கே.எல் ராகுல், ரிஷப்பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா உள்ளிட்டோர் காயம் காரணமாக அணியில் விளையாடதது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனை உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் 2023 போட்டியில் கூட தெளிவாக பார்க்க முடிந்தது. இதனால் தான் வருங்கால இந்திய நலனை கருத்தில் கொண்டு இளம் வீரர்களை தயாராக்கி வருகிறது இந்தியா.
இந்நிலையில் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஏனென்றால் பிட்ச் ரிப்போர்ட்டில் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக மாறியது. உலகின் நம்பர் 1 டெஸ்ட் பௌளரான அஸ்வின் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இடம் பெறவில்லை என்றாலும் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார் அஸ்வின். மேலும் இவருடன் கைகோர்த்த ஜடேஜாவும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முஹம்மது சிராஜ் ஒரு விக்கெட்டும் ஷர்துல் தாகூர் ஒரு விக்கெட்டும் எடுத்து வெஸ்டி இண்டீஸ் அணியை 150 ரன்களுக்கும் ஆல் அவுட் செய்தனர். இது இந்தியாவிற்கு கம்பேக்காக இருந்தாலும் ஏற்கனேவே உலக கோப்பையில் இருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே தற்போது இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அற்புதமான தொடக்கத்தை கொடுத்துள்ளனர். இந்தனிடயே தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தன்னுடைய முதல் டெஸ்ட் ரங்களையே அதிரடியாக பவுண்டரி அடித்து தொடங்கினார். ஐபிஎல் போட்டியில் வெறும் 13 பந்துகளில் அரை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் டெஸ்டிலும் தன்னுடைய பயணத்தி அதிரடியாக தொடங்கியதற்கும் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரை சதம் அடிக்க இன்னமும் 10 ரன்கள் மட்டுமே தேவை. அதோடு இவருடன் கைகோர்த்து ஆடிவரும் ரோஹித் ஷர்மாவும் 65 பந்துகளில் 30 ரன்கள் அடித்துள்ளார். முதல் நாள் முடிவில் இந்திய அணியின் 80 ரன்களை விளாசி விக்கெட்டுகள் எதுவும் இழக்காமல் உறுதியாக இருக்கிறது.





