உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அதாவது ஜூன் 10ஆம் தேதி இறுதிப் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில், மூன்றாவது நாளில் திரும்பிய இந்திய அணி, மூன்றாவது நாள் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதாவது 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

இன்றைய நாள் இந்திய அணிக்கு ஆரம்பத்தில் சிறப்பாகவே அமைந்தது. இந்திய அணியில் இருந்து மூன்றாவது நாளில், அஜிங்க்யா ரஹானே சிறப்பாக பேட்டிங் செய்து 89 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைத்து அற்புதமாக விளையாடி வந்த ஷர்துல் தாக்கூர் அரை சதத்தை பூர்த்தி செய்தார். மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த ரஹானே இறுதிப் போட்டியில் இந்திய அணி அபாரமாக மீண்டு வந்துள்ளது.
ஆனால் ரஹானே கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து அணியில் இருந்து விலகி இருந்தார். பின்னர் உள்ளூர் கிரிக்கெட் மற்றும் 2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடிய பெரும் கவனத்தை பெற்றார். மேலும் தற்போது நடந்துவரும் உலகக்கோப்பி டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு தேவைப்படும் நேரத்தில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

ஆனால் அவர் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் இந்தியா ஆடிய முதல் இன்னிங்கில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்த நிலையில் ரஹானேவும் சில முறை தடுமாறினார். குறிப்பாக அவருடைய விரலில் காயம் ஏற்பட்டது போன்று இருந்தது. மேலும் பல முறை அதற்காக போட்டியின் போது சிகிச்சை எடுத்து கொண்டார். ஆனாலும் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சர்களின் பந்துகளை எதிர்கொண்டதில் அவருக்கு அந்த காயம் மேலும் அதிகமாகி கொண்டுதான் இருந்தது.
View this post on Instagram
ரஹானேவின் மனைவியின் பதிவு :
அப்படிப்பட்ட நிலையில்தான் இன்று ரஹானேவின் மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றி இட்டுள்ளார் . அந்த பதிவில் “காயத்தினால் உங்களுடைய விரல் வீங்கியிருந்தாலும், உங்களுடைய மனநிலையை மாறக்கூடாது என்பதற்காக ஸ்கேன் செய்ய மறுத்து, நம்பமுடியாத தன்னலமற்ற எண்ணத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தி, பேட்டிங்கில் கவனம் செலுத்தினீர்கள். அசைக்க முடியாத நெகிழ்ச்சி மற்றும் அர்ப்பணிப்புடன் நீங்கள் கிரீஸில் விளையாடி எங்களுடைய அனைவருக்கும் உத்வேகம் அளித்தீர்கள்.
உங்களுடைய இந்த அசைக்க முடியாத உணர்வை நினைத்து நான் சொல்லமுடியாத பெருமை அடிக்கிறேன். உங்களை எப்போதுமே நேசிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு முன்னர் ரஹானே அளித்திருந்த பேட்டியில் எனக்கு வலி இருக்கிறது ஆனாலும் அதனை என்னால் தாங்க முடியும் என்று கூறியது குறிப்பிடதக்கது. இந்நிலையில் போட்டியை பொறுத்தவரையில் தற்போது ஆடி வரும் ஆஸ்திரேலியா 5விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து 325 ரன்களில் முன்னிலையில் இருக்கிறது





