ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸின் தங்களுடைய இரண்டாவது போட்டியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் எதிர்கொண்டது. அந்த போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைதானமான சேப்பாக்கத்தில் நேற்று இரவு 7.30மணி அளவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பௌலிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை நன்றாகவே அமைந்தது.

சென்னை மைதானத்தில் முதல் முறையாக களம் கண்ட ருதுராஜ் அருமையான ஆட்டத்தின் மூலம் சென்னை ரசிகர்களுக்கு விருந்தளித்தார். அதன் பின் வந்த சென்னை அணியின் கேப்டன் தோனி வந்த முதல் பந்திலே சிக்ஸ்சரை தெறிக்க விட்டார்.அவர் 3 பந்துகளில் 12 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார் .20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்களை இழந்து 217 ரன்களை குவித்தது
இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தொடக்கத்தில் திணறினாலும் அதற்கு பிறகு சிறப்பான ஆட்டத்தை காட்டி நல்ல ரன்கள் குவித்தனர். கிட்டத்தட்ட வெற்றியடையும் அளவிற்கு வந்து விட்டனர். ஆனால் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. இந்நிலையில் தோனி அடித்த அந்த 3 சிக்ஸர்கள் சோசியல் மீடியாவில் அதிகமாக வைரல் ஆகியது.

வைரல் வீடியோ :
இந்த நிலையில் தான் தற்போது வீடியோ ஓன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது 12லிருந்து 13 வயது இருக்கும் சிறுமி ஒருவர் கிரிக்கெட் வலையில் பயிற்சி செய்கிறார். இது இனைய வாசிகளுக்கு புதிதாக இல்லாமல் இருந்தாலும் அந்த சிறுமி செய்திருக்கும் செயல் தான் தற்போது அதிகமாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. அதாவது அந்த சிறுமி வேகமாக வரும் பந்துகளை மிகவும் பிரமாதமாக அடிக்கிறார்.

ஆனால் அவர் அடிக்கும் பல ஷாட்டுகள் எம்.எஸ்.தோனியை நியாபக படுத்துகிறது. சொல்லப்போனால் தோனியின் விருப்பமான ஷட்டான ஹாலிகாட்டர் ஷாட் ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க முயற்சி செய்தார் அந்த சிறுமி. அது ரசிகர்களுக்கு எம்.எஸ்.தோனியை ஞாபகப் படுத்தியத்தினால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து அந்த வீடியோவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர். அதோடு அந்த சிறுமியை லேடி எம்.எஸ். தோனி என்று அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
View this post on Instagram
எம்எஸ் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் :
எம்.எஸ் தோனியின் புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட் அவரது உண்மையான ஷாட் கிடையாது. அதனை எம்எஸ் தோனிக்கு அவரது நண்பர் சந்தோஷ் லால் தான் கற்றுக்கொடுத்தார். தோனி மற்றும் சந்தோஷ் லால் இருவரும் இந்திய ரயில்வேயில் ஒன்றாக பணிபுரிந்தனர். சந்தோஷ் ஹெலிகாப்டர் ஷாட் ஆடுவதை மஹி முதன் முதலாக பார்த்த போது அவளுக்கும் ஒரு ஆசை வந்தது. அந்த ஷாட்டுகளை கற்றுக்கொடுத்தற்கு பதிலாக தோனி அவருக்கு சமோசாக்களை வாங்கிக்கொடுத்தார்.





