உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவின் கோலாகலமாக நடைபெற்ற வருகிறது. அதில் நேற்று34-வது போட்டியை நெதர்லாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் மோதின. இதற்கு முன்பு புள்ளி பட்டியல் ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்திலும் நெதர்லாந்து அணி எட்டாவது இடத்திலும் இருந்து வந்தது.

ஆப்கானிஸ்தானின் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று இரண்டில் மட்டுமே தோல்வி தழுவி தற்போது பலம் வாய்ந்த அணியாக நேற்றைய போட்டியில் மோதின. இதற்க்கு முன்பு நெதர்லாந்து அணி கடந்த 5 போட்டிகளில் இரண்டில் மட்டும் வெற்றி நேற்றைய போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் தேர்வு செய்தது ஆனால் அது அவர்களுக்கு சற்றும் கைகொடுக்கவில்லை.
நெதர்லாந்து அணிக்கு பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. நெதர்லாந்து அணி 46.3 ஒவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. நெதர்லாந்து அணியின் அதிகபட்சமாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 58 ரன்களும் மேக்ஸ் 42 ரன்களும், ஆங்கர் மேன் 29 ரண்களும் மட்டுமே அடித்திருந்தனர். ஆப்கானிஸ்தானின் சார்பில் நபி மூன்று விக்கெட்டுகளையும் நூர் அகமது இரண்டு விக்கெட் களையும் ரஹ்மத் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்ததனர். மீதமுள்ள நான்கு விக்கெட்டுகளும் நெதர்லாந்தணியின் மோசமான பேட்டிங்கால் மீதம் இருந்த நாக்கு விக்கெட்டுகளையும் இழந்து தவித்தது நெதர்லாந்து அணி.

180 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 31.3 அவர்களின் 3 விக்கெட் இழப்பிற்கு 181ரன்களை குவித்து எளிதாக இந்த போட்டியை வெற்றி பெற்று விட்டது. ஆப்கானிஸ்தானின் சார்பாக ஷைடி 56 ரன்கள் ரஹ்மத் ஷா 52 ரன்கள் உமர் சாய் 31 ரன்களையும் அடித்து இருந்தனர். நெதர்லாந்து அணியின் சார்பில் சாகிப் சுல்பிகர், ரோலோஃப் வான் டெர் மெர்வே மற்றும் லோகன் வான் பீக் தலா ஒரு விக்கெட்டு மட்டுமே எடுத்து இருந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது 5 வது இடத்தில் ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது.

தோல்வி நெதர்லாந்து அணியின் எங்கள் அணியில் கேப்டன் கூறுகையில், நிறைய ரன் அவுட்கள் நடந்தது அது நிச்சயமாக சிறந்ததல்ல. அதிலிருந்து மீள்வது கடினம். நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், ஒரு நல்ல மொத்தமாக நம்மை அமைத்துக்கொண்டோம், ஆனால் அதை கொஞ்சம் விட்டுக் கொடுத்தோம். அவர்களிடம் உயர்தர சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், அவர்களை எதிர்கொள்ள எங்களிடம் டாப் ஆர்டர் பேட்டர்கள் இல்லை. நாங்கள் கொண்டு சென்ற கோட்பாடு பனிக்கு உண்மையில் திட்டமிட முடியாது. பனி இருந்திருந்தாலும் 280 நல்ல ஸ்கோராக இருந்திருக்கும்.சாம்பியன்ஸ் டிராபி தகுதி குறித்து கேள்விக்கு அவர் கூறுகையில் இந்த ஆட்டத்திற்கு முன்பு நாங்கள் அதை பற்றி எதிர்பார்க்கவில்லை, ஆனால் இப்போது நாம் பார்க்க வேண்டிய ஒன்று என்றும் அவர் கூறியிருந்தார்.




