500வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்த சில மணி நேரங்களில் ஏற்பட்ட சோகம். இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டியானது நேற்று ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய அணிக்கு பெரிய அடியாக முதல் செஷன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது.

இந்திய அணியில் சார்பில் ஆரம்பத்திலே ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.அதன் பின் படிதாரும் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 131 ரன்களிலும் அறிமுக நாயகன் சர்ப்ராஸ் கான் 62 ரன்ககளிலும் ஆட்டமிழந்தனர். குல்தீப் 4 ரன்களிலும் ஜடேஜா 112 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை அடித்து இருந்தது.

அதன் பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக இருந்தாலும் மிடில் ஆர்டரில் எந்த ஒரு வீரரும் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. எனவே இங்கிலாந்து அணி 319 ரன்களில் அணைந்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதில் அதிகபட்சமாக டக்கெட் 153 ரன்களும் ஸ்டோக்ஸ் 41 ரன்களும் போப் 39 ரன்களையும் அடித்து இருந்தனர். இதில் இந்திய அணியின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாகவே இருந்தது என்று சொல்லலாம்.
இன்றைய நாளில் அஷ்வின் தனிப்பட்ட காரணத்திற்காக விலகிய நிலையில் இந்திய அணிக்கு அந்த இடத்தில் ஒரு பந்து வீச்சாளர் குறைவாக இந்திய அணி இன்றைய நாளில் விளையாடியது.இருப்பினும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இருந்தது.இதில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளும் பும்ரா 1 விக்கெட்டையும் அஷ்வின் 1 விக்கெட்டையும்(நேற்று) வீழ்த்தி இருந்தனர்.

அதன் பின் சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய அணி நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களை குவித்து இருந்தது.ரோஹித் ஷர்மா 19 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினாலும் இந்திய அணியின் இளைஞர் படை சிறப்பாகவே விளையாடி இருந்தது. இன்றைய நாளில் இந்திய அணியின் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 104 ரன்களிலும் கில் 65 ரன்களும் அடித்து இருந்தனர். கில் மற்றும் குல்தீப் தற்போது களத்தில் இருகின்றனர். இந்திய அணி 322 ரன்கள் முன்னிலையில் உள்ளது.





