கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி தற்போது இந்தியாவில் நடந்துவரும் உலக கோப்பை தொடரிலும் தடுமாறி வருகிறது. ஏற்கனவே ஆசிய கோப்பை போட்டியில் தோல்வியை தழுவியதால் பாபா அசாம் கேப்டன்சி பதைவிக்கு சரியாக இருக்க மாட்டார் என்று குறி வந்த நிலையில் தற்போது அவர்க்கு பதிலாக வேறு கேப்டனை போடுங்கள் என்று விமர்சித்து வருகின்றனர்.
மேலும் ஒரு வீரராகவும் கேப்டன் பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி தற்போது இந்த உலக கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு செல்லலும் வாய்ப்பை கிடடதட்ட இழக்கும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பாகிஸ்தான் அணியின் கேப்டன்சியை மாற்றுவது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடும் போது ஆடுகளம் நன்றாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்து அடிக்கத் தொடங்கினால், பாகிஸ்தானின் நிலைமை சற்று மோசமாகிவிடும். பாகிஸ்தானிலும் வித்தியாசமான சூழல் உள்ளது. அவர்கள் அவர்களுடன் நிற்கிறார்கள் என்று அவர்களின் குழுவிலிருந்து அறிக்கைகள் முன்வைக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன நினைக்கிறது என்பது வெளிப்படுத்த வேண்டும்.
அவர்களது அறிக்கைகளில் இருந்து பாபர் ஆசாமை நீக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவரது கேப்டன்சி சாதாரனமானது என்பதும் அவரது ஃபார்மும் மிகவும் சாதாரணமானது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவர் மட்டும் பிரச்சனை இல்லை. அவரால் நீங்கள் தோற்கவில்லை. உங்களுடைய தோல்விக்கு வேறு பல காரணங்களும் உள்ளன. என்று விமர்சித்தார் ஆகாஷ் சோப்ரா. .
இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் vs தென்னாபிரிக்கா போட்டியானது நடந்து வருகிறது. இந்த போட்டியில் தொடக்கத்திலேயே தடுமாறிய பாகிஸ்தான் அணி தற்போது 33 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைமையில் இருப்பது குறிப்பிடதக்கது.



