உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று ஞாயற்று கிழமை என்பதினால் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது. அதில் முதல் போட்டியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி அணிக்கு இடையே நடந்தது. இந்த போட்டி மும்பை அணிக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் கடந்த சில போட்டிகளாக தோல்வியை மற்றும் சந்தித்து வருவதினால் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மும்பை.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் முதல் ஓவரில் இருந்தே அதிரை காட்ட ஆரம்பித்தனர். டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் ரோஹித் விலாச மறுமுறும் இஷான் இஷானும் அதிரடி காட்டினார். ஆனால் 27 பந்துகளில் 49 ரன்கள் ஆய்த பிறகு ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா.
இதன்போது அவர் பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அளித்திருந்தார். இதற்கு பிறகு வந்த சூரியகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பொறுமையாக நின்று விளையாடி 33 பந்துகளில் 39 ரன்களை எடுத்தார். இவரின் பொறுமையான ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த நேரத்தில் உத்தவியது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில் “நடுவில் சக்கரங்கள் சிக்கின. திலக் வர்மாவும் அவுட் ஆனதால் திடீரென்று அது சரிவராது என்று தோன்றியது. ரோஹித் சர்மாவைத் தொடர்ந்து இஷான் கிஷனும் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் 121/4 என்ற நிலையில் இருந்தனர் மும்பை இந்தியன்ஸ். அப்போது அணி சிக்கியது போல தெரிந்தது. அவர்களுக்கு அங்கு நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது.

டிம் டேவிட்டுடன் ஹர்திக் பாண்டியா இருந்தார். ஹர்திக் பாண்டியா நிச்சயமாக மெதுவாக விளையாடினார், ஆனால் அந்த கட்டத்தில் அது தேவைப்பட்டது, ஏனெனில் இன்னும் ஒரு விக்கெட் விழுந்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் முடிக்கப்பட்டு தூசி தட்டப்பட்டம் நிலைமை அப்போது. மேலும் முகமது நபி அடுத்தாக வரவேண்டும். இருப்பினும் அவர்கள் அங்கு விளையாடி ஆட்டத்தை ஆழமாக கொண்டு சென்றனர்.
டிம் டேவிட் பின்னர் சிக்ஸர் அடிக்கத் தொடங்கினார். டெல்லி அணியின் பந்துவீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் 32 ரன்கள் விளாசினார் ரோமரியோ ஷெப்பர்ட், நாங்கள் சிறுவயதில் விளையாதியா சசூப்பர் மரியோ போல் அடித்துக் கொண்டே இருந்தார். ஷெப்பர்ட் அபாரமான வேலையைச் செய்தார் என்றார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.





