உலக கிரிக்கெட்டில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இருவருமே மிகச்சிறந்த வீரர்கள் என்று சொல்லலாம். இருவருக்குமே இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ரசிகர்கள் இறுகின்றனர். இதனால் இருவரின் ரசிகர்களுக்கு இடையே ஒப்பீடு என்பது எப்போதுமே இருக்கும். மேலும் விராட் கோலிக்கு எப்படி “கிங் கோலி” என்று அழைகின்றனரோ அப்படி பாபர் ஆசாமை கிங் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் அழைக்கின்றனர்.

ஆனால் சமீப காலமாக பாபர் அசாமில் ஆட்டம் என்பது கொஞ்சம் மோசமாக இருந்து வருகிறது. அதாவது நெதர்லாந்து அணிக்கு எதிராக 5 ரன்களும், இலங்கைக்கு எதிராக 10 ரன்களும், இந்தியாவிற்கு எதிராக 50 ரன்களும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 18 ரன்களையும் அடுத்துள்ளார் பாபர் அசாம். மறுபுறம் விராட் ஒரு சதம் உட்பட போட்டியை ஒருமுறை வென்று கொடுக்கும் ஆட்டத்தை விளையாடி ஆச்சரிய படுத்தினார்.
இந்த நிலையில் தான் தற்போது பாபர் கிங் கிடையாது என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரர் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறுகையில் “உலகம் பாபரை மதிப்பிடுகிறது. பாகிஸ்தான் அவரை ‘ராஜா’ என்று அழைக்கிறது. கிங் கோலியை விட சிறந்தவர் அல்லது அவருக்கு இணையானவர் என்று அவர்கள் நிறைய முறை கூறுகிறார்கள். ஆனால் இந்த மாதிரியான நேரத்தில் அவர் அப்படி இல்லை. அவர் விராட் கோலியின் பக்கத்தில் கூட இல்லை.

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், ஏனென்றால் பாபரின் பயணம் இப்போதுதான் தொடங்கியது. ஆனால் விராட் கோலி செல்ல வேண்டிய இடத்திற்கு ஏற்கனவே சென்று விட்டார். அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 48 சதங்களும், மற்றவர்களுடன் சேர்த்து 79 மொத்த சதங்களை அடித்துள்ள ஒரு வீரர் விராட் கோலி.
இது சதங்களைப் பற்றியது மட்டுமல்ல, ஏனென்றால் பாபரும் நிறைய சதங்கள் அடித்துள்ளார், ஆனால் கோலி) ரன்களை அடித்த ஆட்டங்களைப் பற்றி சிந்தியுங்கள். பாகிஸ்தானுக்கு எதிராக அவர் சதம் அடித்தார். ஒரு வெற்றிக்கு மொத்தம் 150 ரன்கள் தேவைப்படும் போது அவர் அதில் சதம் அடித்தார்.

அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 ரன்கள் எடுத்தார். அவர் மேட்ச்-வின்னிங் நாக்ஸை விளையாடினார். ஆனால் விராட் கோலி ஆடிஓயா அந்த பெரிய இன்னிங்ஸ் பாபரிடமிருந்து வரவில்லை. அது இந்த போட்டியிலும் வரவில்லை. 368 துரத்த வேண்டும் என்றால் யாராவது 110 மற்றும் 115 ரன்களை விரைவாக அடிக்க வேண்டும். அல்லது மூன்று நான்கு வீரர்கள் 70 முதல் 80 ரன்கள் எடுக்க வேண்டும். இதனால் தான் கிங் பக்கத்தில் பாபர் இல்லை என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.




