கடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் அந்த போட்டியில் தேர்வு செய்யப்படாத அஸ்வின் ஒரு கருத்தை முன்வைத்தார். அதாவது முன்னரெல்லாம் அணியில் இருந்தவர்கள் நண்பர்களாக இருந்தார்கள், ஆனால் இப்போது இவர்கள் உடன் வேலை செய்பவர்களாக மட்டுமே இருக்கின்றனர் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்த வருத்தப்பட்டிருந்தார்.

மேலும் இதற்கு பிரித்வி ஷாவும் இதே கருத்தை முன்வைத்து பேசியிருந்தார். அபப்டிப்பட்ட நிலயில் தான் ஆகாஷ் சோப்ரா அஸதிரேலியா அணியின் வீரர்களை பற்றி பேசியுள்ளார். அதாவது ஆஸ்திரேலிய அணியில் உள்ள வீரர்கள் தங்களுக்குள் அவ்வளவு நட்பு இல்லை என்றும் அனால் அவர்கள் வெற்றிகரமான அணியாக இருக்கின்றனர் என்றும் கருத்துகள் வெளியாகி இருந்தது.
ஆகாஷ் சோப்ரா கூறியது :
இந்நிலையில் இதனை குறிப்பிடு பேசிய ஆகாஷ் சோப்ரா “ஆஸ்திரேலிய அணியானது சரியாக சொல்கின்றனர். அவர்களை ஒருவருக்கு ஒருவர் அவ்வளவு பிடிக்காது என்றாலும் அவர்கள் மைத்தனத்திற்குள் நுழைந்த பிறகு அவற்றை மறந்து ஒரு அணியாக விளையாடுகின்றனர். இது இந்த அணியில் மட்டுமே நடப்பது கிடையாது பல அணிகளில் நடக்கிறது. ஒரு அணி வெற்றிபெற குடும்பமான சூழ்நிலை இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

நான் டெல்லிக்காக பல வருடங்கள் விளையாடினேன். என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களும் அந்த டிரஸ்ஸிங் அறையின் ஒரு பகுதியாக இருந்தனர், ஆனால் நீங்கள் ஒரு அணியாக இருக்கிறீர்கள், எனவே நம்முடைய வேலையை சரியாக செய்ய வேண்டும். எல்லோரும் முன்னேற முயற்சி செய்கிறார்கள் என்பது மேலான உணர்வு. போட்டியில் அனைவரும் ரன்களை எடுக்க வேண்டும், ஆனால் நீங்களே அதிக ரன்களை எடுக்க வேண்டும்.
பின்னர் நான் இரண்டு மூன்று வருடங்கள் நான் ராஜஸ்தானில் ஒரு அங்கமாக இருந்தபோது டெல்லி அணியில் இருந்ததை போலத்தான் இருக்கும் என்று எதிர் பார்த்தேன். ஆனால் அங்கு நான் நினைத்த விடவும் அப்படியே தலைகீழாக் இருந்தது. அணியில் உள்ள வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்தேன். நான் இருந்த எல்லா டிரஸ்ஸிங் ரூம்களிலும் இதுதான் மகிழ்ச்சியான சூழல்.
இதிலிருந்து என்ன வேறுபாடு உள்ளது? இரண்டுமே மிகவும் வெற்றிகரமான அணிகளாக இருந்தனர். ஒரே ஒரு ரஞ்சி கோப்பையை மட்டுமே டெல்லி வென்றது, ஆனால் இரண்டு வருடங்கள் தொடர்ந்து ராஜஸ்தான் வென்றதால். இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் ஓன்று நீங்கள் வெற்றிகரமான டிரஸ்ஸிங் ரூமின் இருக்க வேண்டும், அல்லது அந்த டிரஸ்ஸிங் ரூமில் வெற்றிகரமான வீரர்கள் இருக்க வேண்டும் என்றார் ஆகாஷ் சோப்ரா.




