மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான முதல் டெஸ்டின் 2 ஆம் நாள் பேட்டிங்கில் இந்திய அணியானது மிகவும் திறமையுமாக விளையாடிது. இதற்கு முன்னதாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சில் 150 ரன்களுக்கு சுருட்டது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சதம் அடித்தனர்.

ஆனால் எப்போதும் போல இல்லாமல் இந்த முறை ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்ததும் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய சுப்மன் கில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதற்கு முன்னர் உலக கோப்பை போட்டியில் சரியாக விளையாடாத அழுத்ததுடன் இந்த அழுத்தமும் தற்போது அவருக்கு சேர்ந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பிரபல வர்ணனனையாளருமான ஆகாஷ் சோப்ரா யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் சுப்மன் இடத்தில் களமிறங்கினார். மூன்றாவதாக இறங்குவது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று இப்போது அவர் தெரிந்து கொண்டிருப்பார். அவர் பல சர்வதேச போட்டிகளில் தொடக்க வீரராக தான் முதல் இன்னிங்கில் களம் இறங்கினார் ஆனால் இப்போது அவர் ஒரு மிகப்பெரிய பாட்னர்ஷிப்பிற்கு பிறகு மூன்றாவதாக வந்தார். அதனால் அவர் கைகளை தளர்த்தாமல் இறுக்கமாக வைத்து ஆடியதால் ஆட்டமிழந்தார்.

உங்களுக்கு நியாபகம் இருந்தால் இதே போன்று இந்தூரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் ஆட்டமிழந்தது நினைவு வந்திருக்கும். அதே போன்று தான் இந்த போட்டியிலும் அவர் ஆட்டமிழந்தார். அஸ்திரேலியாவில் நடந்த போட்டியின் போது குகமேனன் பந்துவீசினார். அப்போதும் கைகளை தளர்த்தாமல் இறுக்கமாக வைத்து விளையாடியதால் தான் ஆட்டமிழந்தார். எனவே இந்த முறையில் விளையாடுவதை அவர் மேலும் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் மாற்றிக்கொள்வார்.
சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு விராட் கோலி வந்தார். அவர் தான் தயாராகிக்கொள்வதற்கு தேவையான நேரத்தை ஒதுக்கி கொண்டார். எதிராணியும் தட்டையாகத்தான் தெரிகிறது. அவர்கள் தங்களிடம் இருக்கும் 9 பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தி விட்டார்கள். மேலும் அவர்கள் 100வது ஓவரில் வரையில் பழைய பந்திலேயேதான் விளையாடினார்கள். விராட் கோலி தற்போது தயாராகிவிட்டார் என்று நினைக்கிறேன். அவருக்கு சதம் அடிக்க இன்னமும் சில ரன்கள் மட்டுமே தேவை என்றார் ஆகாஷ் சோப்ரா.
மேலும் பேசிய அவர் இந்தியா தற்போது 162 ரன்கள் என்ற நல்ல நிலைமையில் இருக்கிறது. மைதானம் கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. எனவே இங்கு ரன்களை விரைவாக அடிப்பது என்பது மிகவும் கடினமான ஓன்று. ஆனால் பேட்ஸ்மேன் சரியாக விளையாடினாள் நீண்ட நேரம் இங்கு நிற்கலாம் என்று கூறினார் ஆகாஷ் சோப்ரா.




