சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எப்படி விராட் கோலியோ அப்படி பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருகிறார். சொல்லப்போனால் தற்போதய காலங்களில் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசும் அளவிற்கு அசாதாரணமான திறமைகளை காட்டி வருகிறார் பாபர் அசாம். மறுபுறம் ஒரு காலத்தில் எந்த பந்து போட்டாலும் அதிரடியாக விளையாடி ரன் மெஷின் என பெயர் எடுத்த கோலி தற்போது விளையாடுவதற்கு தடுமாறி வருகிறார்.

சமீப காலமாக அவருடைய பேட்டிங் என்பது முழு வீச்சில் இல்லை என்பது நன்றாகவே கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தெரிந்தது. சமீப காலமாக அவருடைய பேட்டிங் என்பது முழு வீச்சில் இல்லை என்பது நன்றாகவே கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தெரிந்தது. இதனிடையே பாபர் அசாம் தற்போது சர்வதேச ஒருநாள் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
இதனாலேயே பலவிதமான சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் பேசமப்படும் குறிப்பாக விராட் கோலி ஆட்டமிழந்தால் அவருடன் பாபர் அசாமையும், பாபர் அசாம் சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட வில்லை என்றார் அவருடன் விராட் கோலியையும் ஒப்பிடுவது வழக்கமான ஒன்றுதான். அப்படிப்பட்ட நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அக்யூப் ஜாவித் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “நீங்கள் விராட் கோலியை பாபர் பாசமுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கோலிக்கு சிறப்பாக செயல்பாட்டை சில சீசன்கள் உள்ளன. அவருக்கு என்று ஒரு சிறந்த சீசன் இருக்கும். பின்னர் அது குறையும். அவர் அந்த சீசனில் சிறந்த வீரர். ஆனால் அவர் பாபர் ஆசாம் போல நிலையானவர் அல்ல.பாபர், கேப்டனாகவு அவரது இடம் உறுதியானது, வீரர்கள் அவர் சொல்வதை கேட்க விரும்புகிறார்கள். உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு இதுவே சிறந்த வாய்ப்பு என்று நினைக்கிறேன்.

ஒரு சில வீரர்களுக்கு இதுவே கடைசியாக இருக்கலாம் என்று நீங்கள் பலமுறை எண்ணுகிறீர்கள். இந்த முறை இந்தியாவிற்கு இது நடக்கிறது என்று நான் உணர்கிறேன். நட்சத்திரங்கள் வாழ்க்கையை விட பெரியதாக மாறும்போது, அணி நிர்வாகத்திற்கு அவர்களுக்கு தகுந்த முடிவுகளை எடுப்பது கடினம். அதனால்தான், அனைத்து துறைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், பாகிஸ்தானுக்கு இந்த முறை நல்ல வாய்ப்பு உள்ளது.




