எம்.எஸ்.தோனிக்கு புதிய மற்றும் விண்டேஜ் பைக்குகளின் மீதியுள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தனக்கு பழைய கார்களின் மீதும் பிரியம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் தலைசிறந்த கேப்டங்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. அவர் கேப்டனாக ஆனவுடன் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்று தந்தார் தோனி.

பின்னர் இந்த வெற்றி தொடர ஆரம்பித்து பல போட்டிகளில் வெற்றி பெற்ற தோனி 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் பல ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று கொடுத்தார். இதற்கு பிறகு 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியிலும் கோப்பையை வென்று கொடுத்த தோனி ஐபிஎல் போட்டியிலும் சென்னை அணிக்காக 5 கோப்பைகளை வென்றது கொடுத்தார்.
இரண்டு மாத கால சீசனுக்குப் பிறகு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அடுத்த வருடம் நடக்கும் உலக கோப்பை தொடரில் தோனி கலந்து கொள்ள மாட்டார் என்றிருந்த நிலையில் 2024 நடக்கும் ஐபிஎல் சீசனில் தோனி விளையாட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தான் இது குறித்து பேசியுள்ளார் முன்னாள் தென்னாபிரிக்க வீரரான ஏபிடிவில்லியர்ஸ்.

அவர் கூறுகையில் “தக்கவைத்தல் பட்டியலில் தோனியின் பெயரை நான் பார்த்தேன். அது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த சீசனில் இது அவரது கடைசி சீசனாக இருக்குமா என்பது பற்றி நிறைய பேசப்பட்டது. ஆனால் 2024 க்கு மற்றொரு போட்டியில் விளையாட உள்ளார். அவர் எப்போதும் ஆச்சரியங்கள் நிறைந்தவர். ஒருவேளை அவருக்கு இன்னும் மூன்று சீசன்கள் விளையாடலாம். யாருக்குத் தெரியும்? ஆனால் அங்கு அவரது பெயரைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும் பேசிய ஏபிடி கூறுகையில் ஷாருக் கான் குறித்தும் பேசியிருந்தார் மேலும் அவரை சென்னை அணி வாங்க முயற்சி செய்யும் என்று கூறினார். இது குறித்து அவர் பேசுகையில் “ஷாருக்கான் ஒரு வலுவான வீரர் மற்றும் மிகவும் சீரானவர். சில அணிகள் அவரை தங்களது அணிக்கு அழைத்துச் செல்ல மிகவும் ஆர்வமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அவர் பந்தை நீண்ட தூரம் அடிப்பார். அங்குதான் சிஎஸ்கே தனித்து நிற்கிறது. அவர்கள் விடுவிக்கப்பட்ட வீரர்களை எடுப்பதில் மிகவும் திறமையானவர்கள் என்பதில் மறந்துவிடுங்கள். ஏனென்றால் மற்ற ஆணிகளால் கைவிடப்பட்ட வீரர்கள் திடீரென்று மஞ்சள் ஜெர்சியில் விளையாடி அந்த தொடரில் முதல் ஐந்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் அல்லது விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் உள்ளனர் என்று கூறியுள்ளார் அவர்.




