கடந்த 16ஆம் தேதி தொடங்கிய ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து டாஸை வென்று பந்துவீச முடிவு செய்தது. அந்த முடிவு சரியானதாகவும் சென்ற நிலையில் முதல் இன்னிங்கில் 393 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டக்ளர் செய்தார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ஆனால் இங்கிலாந்தின் பந்துகளை பறக்கவிட்ட ஆஸ்திரேலிய முதல் இன்னிங்கில் 386 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்கில் ஆடிய இங்கிலாந்து அணி மளமளவென விக்கெட்டுகளை இழக்க 273 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரலேயா தொடக்கத்தில் திணறினாலும் பின்னர் சுதாரித்து கொண்டு ரன்களை குவித்தது. இந்தியில் 2 விக்கெட்டுகள் மட்டுமே கையில் இருந்த நிலையில் அற்புதமான வெற்றியை பெற்றது ஆஸ்திரேலியா.
இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலியா அணியின் காஜ்வா மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் இருவரும் முக்கிய காரணம் என்று கூறலாம். ஏனென்றால் பாட் கம்மின்ஸ் இரண்டாவது இன்னிங்கில் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுக்காமல் 44 ரன்களையும் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிசெய்தார். அப்படிப்பட்ட நிலையில் தான் நேற்று நடந்த போட்டியின் இடையே முன்னாள் தென்னாபிரிக்க அணியின் அதிரடி வீரரான ஏபி ஏபி டிவில்லியர்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றி இட்டிருந்தார்.

அந்த பதிவில் “நான் பார்மிங்கம் மைதானம் இந்த ஆஷஸ் போட்டிக்கு முக்கிய பங்காற்றும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இங்கிலாந்து அணியின் அதிரடி முடிவுகள் எனக்கு இப்போது புரிய வருகிறது. இந்த விஷியத்தை பேஷ்பால் என்றும் கூறலாம் எப்படி வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் நான் இதனை புத்திசாலித்தனமாக கிரிக்கெட் என்றுதான் கூறுவேன்.
I never looked at the Birmingham weather leading up to this Test match. The way England played now makes sense. Call it what you want, some say Bazz Ball, I just think it’s smart Cricket. The best teams are prepared to adapt and play situations in a way that’ll ultimately put…
— AB de Villiers (@ABdeVilliers17) June 20, 2023
சூழ்நிலைகளுக்கு தகுந்த படியாக தங்களை மாற்றிக்கொண்டு செயல்படும் அணிகளே சிறந்தது. இங்கிலாந்து அணி செய்த்தை போன்று நாம் இப்படி தைரியமாக டிக்ளேர் செய்யமாட்டார்கள். அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரிவர்ஸ் ஷார்ட் ஆடுவது போன்றவை. ஆனால் ஒரு அணியாக இந்த மாதிரியான விஷியங்களை செய்வது என்பது கடினம். எனவே அணியில் உள்ள அணைத்து வீரர்களும் தங்களிடையே உள்ள ஈகோவை விடுத்து ஒரே மாதிரியாக விளையாடினால் தான் இது முடியும்.
மேலும் இப்படி செயல்படுவதன் மூலம் உலக கிரிக்கெட்டில் நீங்கள் சிறந்த அணி என்ற பெயரை எடுப்பீர்கள். இப்படித்தான் இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது. இதோ போன்றுதான் எம்.எஸ் தோனியும் அவருடைய அணியும் ஐபிஎல் போட்டியில் விளையாடினார்கள். இது தரமான நாளாக இருக்கும் என்று போட்டி முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஏபி டிவில்லியர்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.




