
உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள். இது வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் விளையாடும் விளையாட்டு ஆகும். இந்த லீக் தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.

அவர் 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது. இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர்.
ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷரம்வை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் சாரமா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் 2024 மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ரோகித் சர்மாவின் 10 வருட கேப்டன்ஷிப் முடிவுக்கு வந்துள்ளது இது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, ரோகித் சர்மா இதுவரை மும்பை அணியின் கேப்டன் 158 போட்டிகளில் விளையாடி உள்ளார் அதில் 87 போட்டிகளில் வெற்றியும் 67 போட்டிகளில் தோல்வியும் நான்கு போட்டிகளில் ட்ராவிலும் முடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ஹர்திக் பாண்டிய மும்பை அணியின் கேப்டன்சிக்கு வந்தது அணியில் உள்ள பல வீரர்களுக்கு அதை ஏற்றுகொள்ள முடியாமல் அவர்களது ஆதங்கத்தை தற்போது வெளிக்காட்டி இருக்கின்றனர். அந்த வகையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் இணைந்த உடனே பும்ரா மும்பை அணியை பின்தொடர்வதை நிறுத்தி விட்டார். அது அப்போதே சர்ச்சையானது. மேலும் தற்போது சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிரம் ஸ்டோரியில் அவரது எமோஷனை தெரிவித்துள்ளார்.
Suryakumar Yadav's Instagram story. pic.twitter.com/4SmXGgRHxU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 16, 2023
அதில் அவர் இதயம் உடைந்தது போல எமோஜி ஒன்றரை பதிவு போட்டு இருந்தார். இதில் இருந்து அவருக்கு ரோஹித் ஷர்மாவின் கேப்டன் ஷிப் தான் பிடித்து இருகின்றது என்றும் தற்போது ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி அவருக்கு பிடிக்கவில்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். கடந்த ஐபிஎல் போட்டியில் ரோஹித் ஷர்மா மைதானத்தில் இல்லாதபோது சூர்யகுமார் யாதவ் மும்பை அணியை கேப்டன்ஷிப் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





