உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 30 வது போட்டியை இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் பூனேவில் மோதின. புள்ளி பட்டியலில் இலங்கை 5 இடத்திலும் ஆப்கானிஸ்தான் அணி ஏழாவது இடத்திலும் இருந்திருக்கிறது. இந்த போட்டியில் வென்றால் அரை இறுதிக்கு வாய்ப்புள்ளது என இரு அணிகளும் கடுமையான பயிற்சி மேற்கொண்டு இந்த போட்டிக்கு களமிறங்கினார்கள்.

இலங்கை அணி இதற்கு முன்னதாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் மோதி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து பலமாக இன்று ஆப்கானிஸ்தான அணியுடன் மோதினர். இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதற்கு ஏற்றார் போல் பந்துவீச்சு இலங்கை அணியை கட்டுப்படுத்தி 49.3 ஓவர்கலில் அனைத்து விக்கெட் களையும் இழந்து இலங்கை அணி 241 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் சமாளிக்க முடியாமல் இலங்கை வந்ததது. இலங்கை அணியின் அதிகபட்சமாக நிசாங்க 46 ரன்கள். குசல் மென்டிஸ் 39 ரன்களும் சதீரா 36 ரன்களும் அடித்து இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சாளர்க பருகி நான்கு விக்கெட்டுகளையும் ரஹீம் இரண்டு விக்கெட்களையும், ரஷித் கான் மற்றும் உமர் சாய் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.
242 ரங்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலில் நல்ல தொடக்கமே இருந்ததால் அவர்கள் 45.2 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தானின் அதிகபட்சமாக உமர் சாய் 73 ரன்களும் ரஹ்மத் ஷா 62 ரன்களையும், அகமாதுல்லா 58 ரன்களையும் குவித்திருந்தனர்.

இலங்கை அணியின் சார்பில் பந்து வீச்சாளர்கள் வீசிய பந்தினை ஆப்கானிஸ்தானனியின் வீரர்கள் எளிதாக அடித்து மாபெரும் வெற்றியை பெற்றனர். இலங்கை அணி சார்பில் தில்சன் இரண்டு விக்கெட்கழியும் ரஜித்த ஒரு விக்கெட் மட்டுமே விழித்திருந்தனர். எனவே ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது.



