இந்திய அணியில் எப்போதும் திறமையாக வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அவர்களை அணியில் எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்கு சரியான வாய்ப்பு அளிக்காமல் பெஞ்சில் அமர வைத்து அதன் பின் அவர்களை அணியில் இருந்து நீக்கிவிடுகிறார்கள். இதே போல் சமீபத்தில் சஞ்சு சாம்சன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை தற்போது தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுபயனத்திற்க்கு அணியில் சேர்த்துள்ளது.

ஆனால் அவரை விளையாட அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்கு அதேபோல் தான் இஷான் கிஷனும். இஷான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அணியில் அறிமுகமாகிவிட்டார். 2022ஆம் ஆண்டு தொடக்க ஆட்டகரகாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு நாள் தொடரில் களமிறங்கினார். அந்த தொடரில் மூன்றாவது போட்டியில் அவர் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். அப்போது அவருக்கு அணியில் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு அணியில் ஒரு நிரந்தர இடம் இதுவரை கிடைக்கவில்லை.
இருப்பினும் அவர் அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்திலும் சரியாக பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து தொடர்களை கொண்ட ஆஸ்திரேலியா எதிரான டி20 போட்டியில் அவர் மூன்று போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தார். கடைசி இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசி இரண்டு போட்டிகளில் அவருக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர் அணியில் இணைந்தார் அவர் அந்த இரண்டு போட்டிகளில் விளையாடினார். இஷான் கிஷான் கிடைத்த மூன்று போட்டிகளிலும் இரண்டு போட்டியில் அவர் அரை சதத்தை அடித்து அசத்தியிருந்தார்.

தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் இருப்பதற்கு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா சில கருத்துக்களை கூறியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், இந்திய அணி இளம் வீரர்களுக்கு எப்போதும் வாய்ப்பு மறுக்கப்பட்டு மற்றும் அணியிலிருந்து நீக்கி வீட்டிற்கு அனுப்பி வருகிறது. ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த சில வீரர்களில் இவரும் ஒருவர் தான். எனக்கு இஷான் கிஷனை மிகவும் பிடிக்கும். ஆனால் அவரை அணியிலிருந்து திருப்பி அனுப்பி கொண்டே இருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடமாக அவரை பரிசோதனை செய்வதற்காக மட்டுமே அணியில் வைத்து இருந்தனர்.

அவரை பரிசோதனை செய்து கொண்டே இருந்தால் அவர் எப்படி சிறப்பாக விளையாட முடியும்? தன்னை எவ்வாறு வெளிப்படுத்தி காட்டும் முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார் அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு 5 போட்டிகளைக் கொண்டு டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய அவர் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட்டினார். அதன் பின் அவருக்கு எதற்கு ஓய்வு அளிக்க வேண்டும்? அவர் என்ன அவ்வளவு சோர்வாக இருந்தாரா? அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. யாராவது இரட்டை சதம் அடித்தார்களா இப்படி முழுமையாக விளையாட வைக்காமல் தன்னை எவ்வாறு நிரூபிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்




