
டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றது. இந்திய அணிக்கு கோப்பை என்பது கனவாகவே இருந்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் கோப்பையில் வேண்டுமென்று இந்திய அணி முனைப்போடு இந்திய அணி விளையாட உள்ளது.

டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு அணிகள் இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது. அது மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு பிறகு அதிக அணிகளை கொண்ட உலக கோப்பை போட்டியாகவும் இது அமைய உள்ளது. அந்த அளவிற்கு உலகக் கோப்பை போட்டியில் 20 அணிகள் கலந்து கொள்ள தயாராகி உள்ளது.
இந்திய அணி உலகக்கோப்பை டி20 போட்டிக்கு கடந்த வருடம் முதல் இருந்து தயாராகி வருகிறார்கள். அதற்கு முதற்கட்டமாக இந்திய அணி t20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமித்தது. அதன் பின் இந்திய ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் ஒன்றில் கூட விளையாடவில்லை. அடுத்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் அவர் அணியில் இருப்பாரா இல்லையா என்பது கேள்வி கூறியாக இருந்து வருகிறது.

இருப்பினும் தற்போது ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் யார் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட போகிறார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் இடையே இருந்து வந்துள்ளது. இந்திய t20 அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய கட்டாயம் அணியில் இருக்க வேண்டும் என்று முன்னால் இந்திய வீரர்கள் பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,
இந்திய அணியில் தற்போது பும்ராவை விட கடைசிகட்ட ஓவர்களை வீச பந்துவீச்சாளர்கள் வேறு யாருமில்லை. இது உங்களுக்கு டி20 உலக கோப்பையில் பிரச்சினையாக அமையலாம். போட்டிகள் பகல் நேரத்தில் நடக்கும்போது பந்து ரிவஸ் ஸ்விங் ஆகலாம். இதை அர்ஷ்தீப் சில நாட்களாக சிறப்பாக ஒன்றும் செய்யவில்லை. கடந்த போட்டியில் கடைசி ஓவர் அவர் அற்புதமாக வீசியிருந்தார் ஆனால் ஓராண்டு காலத்திற்கு முன்பு அவர் வீசியது போல் அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை.
ஆவேஷ் கான் திட்டத்தின் கீழ் வரமாட்டார். முகேஷ் குமார் ஓரளவுக்கு சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதே சமயத்தில் சிராஜ் மற்றும் சமி இருவரும் கடைசி கட்ட ஒவர்களை வீசுவதில் கவலை தரக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இந்தியா டி20 வெல்ல வேண்டும் என்றால் இந்த விஷயத்தை சரி செய்து ஆக வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தால் இல்லை என்றால் அவர் இந்திய அணிக்கு இது சவாலாக மாறிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.





