சில நாட்களாக இணையத்தில் பகிரப்பட்டு வரும் செய்தி என்றால் அது இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர்கள் சம்பளம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது தான் பிசிசிஐ நேற்று மத்திய ஒப்பந்தம் 2023 மற்றும் 2024 காண பெயர்களை வெளியிட்டது. அதில் சில முக்கிய வீரர்களின் பெயர்களை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நிக்கியது தான். அதில் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர்கள் தான் மிகவும் பேசப்பட்டு வந்தாலும் அதற்கு அடுத்தபடியாக சாஹல் புஜாரா ஷிகர் தவான் உமேஷ் யாதவ் ஆகியோரின் பெயர்களும் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இஷான் கிஷான் தென் ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடரின் போது மன சோர்வு காரணமாக அணியிலிருந்து விலகினார். ஆனால் அதன் பின்னர் அவர் ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடாமல் ஐபிஎல் 2024 பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கு பிசிசிஐ எப்போது ஒரு எச்சரிக்கை ஒன்றையும் அளித்து இருந்தது. ரஞ்சி ட்ரோபியில் விளையாட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இஷான் கிஷன் அதனை சற்றும் மதிக்காமல் அவ்வாறு தொடர் ஐபிஎல்காக பயிற்சி மேற்கொண்டு வந்திருந்தார்.

அதே போல் ஹர்திக் பண்டியாவும் உலகக்கோப்பை போட்டியின் போது காயம் காரணமாக வெளியேறினார். அதன் பின் அவர் குணமடைந்ததும் ஐபிஎல்க்காக பயிற்சியில் இருந்து வருகிறார். இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டு இருந்தது குறித்தும் அதில் ஏன் ஹர்திக் பாண்டியா பெயர் நீக்கவில்லை என்றும் பலர் அவர்களது ஆதங்கத்தை தேரிவித்து இருந்தனர். ஹர்திக் பாண்டியா குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,
“ஹர்திக் பாண்டியாவின் வழக்கு மிகவும் எளிமையானது. அவர் தவறு செய்யவில்லை என்றால் அவரை ஏன் தண்டிப்பீர்கள்? அவர் ரெட்-பால் கிரிக்கெட் விளையாடவில்லை. அந்த லட்சியமோ ஆசையோ இப்போது இல்லை. அவர் அப்படிச் சொல்லவில்லை, ஆனால் உண்மை. எந்த டெஸ்ட் தொடருக்கும் அவர் கிடைக்கவில்லை.

எனவே நீங்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு ஆடிஷன் இல்லை என்றால், யாரும் உங்களை முதல்தர கிரிக்கெட் விளையாடச் சொல்ல மாட்டார்கள், இவ்வளவு ஓவர்கள் வீசுவதற்கு உங்கள் உடலில் அவ்வளவு வலிமை இல்லாத நீங்கள் எப்படி நான்கு நாள் ஆட்டங்களில் விளையாடுவீர்கள்? காயம் பிரச்சனையா? அப்படியானால் அவர் ஏன் விளையாட வேண்டும் – நியாயமான ஆட்டம்” என்று அவர் மேலும் கூறினார்.




