வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அஸ்திரலியா இங்கிலாந்தை வீழ்த்தி 0 – 2 என்ற முன்னிலையில் இருக்கிறது. இதனால் தங்களுடைய சொந்த மண்ணில் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்து விட கூடாது என்பதற்காக இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டியில் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து போராடி வருகிறது.

இதனிடையே ஒரு தகவல் சோசியல் மீடியாவில் உலா வருகிறது. அதாவது ஆஸ்திரேலிய வீரரான அலெக்ஸ் கேரி லீட்ஸ் முடியை திருத்தம் செய்து கொள்ள, டேவிட் வார்னர், கவாஜா போன்ற தன்னுடைய அணியின் வீரர்களுடன் அந்த நகரில் உள்ள முடி திருத்தும் செய்யும் கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்த நேரம் கடை மூடும் சமயத்தில் முடிகளை திருத்தம் செய்து கொண்டு பணத்திற்கு பதிலாக கார்டை கொடுத்துள்ளாராம்.
ஆனால் அந்த கடையில் கார்ட் பாயிலாக பரிவார்த்தை செய்யப்படாது என்று கூறப்பட்டதினால் பின்னர் தருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றதாகவும், முடி திருத்தம் செய்த்த்ற்கான 30 யூரோவை 2 நாட்கள் ஆகியும் அலெக்ஸ் கேரி லீட்ஸ் கொடுக்காததால் அந்த கடையின் உரிமையாளர் பணத்தை திருப்பி தர கெடு விதித்துள்ளதாக சன் பத்திரிகையில் வெளியானது. இந்த செய்து அதிக சர்ச்சையானது என்பது சோசியல் மீடியாவில் தீயாக பரவியது. இதனையடைத்து வர்ணனையாளர் அலெஸ்டர் குக் கலாய்க்கும் படியாக பேசினார்.
A shocking revelation about Australia's Alex Carey! 😲#BBCCricket #Ashes pic.twitter.com/fzljpIdHho
— Test Match Special (@bbctms) July 6, 2023
ஸ்மித் பதிலடி :
மேலும் இது உண்மையில் நடந்தது என்றும் தான் விளையாட்டிற்க்காக எதுவும் சொல்லவில்லை என்றும் அவர் கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது. இப்படிப்பட்ட நிலையில் தான் ஆஸ்திரேலிய அணியின் வீரரான அலெக்ஸ் கேரி லீட்ஸ் 2 வது போட்டியை முடித்துக்கொண்டு எங்கேயும் செல்லவில்லை என்றும் அதனை தான் உறுதி செய்வதாகவும் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.
Steve Smith confirms that Alex Carey hasn't been in any salon in London. pic.twitter.com/PXlPzhsAfy
— Dr. Cric Point (@drcricpoint) July 8, 2023
மேலும் இப்படிப்பட்ட பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம் என்றும் செய்து ஊடகங்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நெட்டிசன்களின் கருத்துபடி இது ஜானி பேர்ஸ்டோவை அலெக்ஸ் கேரி லீட்ஸ் சர்ச்சையான முறையில் அவுட் செய்த போது ஆஸ்திரேலியாவின் ஊடகங்கள் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸை கலாய்க்கும் படியாக குழந்தை போன்று சித்தரித்து செய்தி வெளியிட்டனர். அப்படியொரு நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் படியாகத்தான் இப்படி நடந்துள்ளதாக பரவலாக பேசப்பட்டது.

மன்னிப்பு கேட்ட அலிஸ்டர் குக் :
இந்நிலையில் தான் இந்த சம்பவம் குறித்து வர்ணனையாளரான அலிஸ்டர் குக் அதிரடியாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் பிசிசி ஊடகத்திற்கு கொடுத்திருந்த பேட்டியில் “மழை பெய்த அதே நாளில் சில பிரச்சனைகளும் ஏற்பட்டது. குறிப்பாக முடி திருத்துவது குறித்து ஒரு செய்தியை நாம் விவாதித்தோம். ஆனால் அது வேறொரு நபருக்கு பதிலாக அலெக்ஸ் கேரி என்று தவறாக பதிவிட்டதால் தானும் தவறாக நினைத்து பேசியதாகவும், அதற்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.




