500வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்த அஷ்வின். இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டியானது நேற்று ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய அணிக்கு பெரிய அடியாக முதல் செஷன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது.

இந்திய அணியில் சார்பில் ஆரம்பத்திலே ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் படிதாரும் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 131 ரன்களிலும் அறிமுக நாயகன் சர்ப்ராஸ் கான் 62 ரன்ககளிலும் ஆட்டமிழந்தனர். குல்தீப் 4 ரன்களிலும் ஜடேஜா 112 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை அடித்து இருந்தது.
அதன் பின் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதில் முதல் விக்கெட்டை (க்ராலி) வீழ்த்தி இருந்தார். அஷ்வின் அதன் மூலம் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டையும் அவர் பதிவு செய்து இருந்தார். அணில் குப்ம்ளேக்கு பிறகு 500வது விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அது மட்டுமல்லாமல் முத்தையா முரளி தரனுக்கு பின் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.
500வது விக்கெட் குறித்து அஷ்வின் கூறுகையில், இது ஒரு நீண்ட பயணம். இந்த 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். என் வாழ்க்கையில் நான் செய்த எல்லாவற்றிலும் அவர் என்னுடன் உறுதுணையாக இருந்து வருகிறார். அவர் தொடர்ந்து டிவியில் என்னுடைய விளையாட்டுகளைப் பார்த்து, எனக்கு ஆதரவாக இருந்ததால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இப்போது தூள்தூளாக்கியது. இங்கிலாந்து விளையாடும் விதம், நீங்கள் அதிக ஓவர்கள் வீச வேண்டியதில்லை.

அவர்கள் அதிக உள்நோக்கத்தைக் காட்டுகிறார்கள், சிந்திக்க குறைந்த நேரத்தையும் குறைவான உழைப்பையும் தருகிறார்கள். ஐந்தாவது நாளில் இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். நாம் அங்கேயே தொங்க வேண்டும்… விளையாட்டு சமநிலையில் தொங்குகிறது. சில விஷயங்கள் நாளை காலை நம் வழியில் நடக்கும், மேலும் நாமே ஆதிக்கம் செலுத்துவதைக் காண்போம். அவர்கள் எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார்கள், ஆனால் அதற்க்கு பதிலளிப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார்.





