ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. எம்.எஸ். தோனி கேப்டனாக தனது ஐந்தாவது பட்டத்தை வென்று இறுதியில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்ய முடியும் அல்லது குஜராத் அணி வென்றால் இவ்விரு அணிகளை தவிர்த்து மூன்றவது பெரிய அணியாக குஜராத் டைட்டன்ஸ் உருவெடுக்கும்.

சென்னையை பொறுத்தவரை டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் குஜராத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். அவர்கள் இறுதியில் குவாலிஃபையர் 1 இல் குஜராத் அணியியை சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி பெற்றனர் . அதற்கு மேல், தோனியிடம் மிகவும் தேவையான அனுபவம் உள்ளது, ஹர்திக் பாண்டியாவிற்கும் அதிக முறை இறுதி போட்டியில் விளையாடிய அனுபவம் இருந்து வருகிறது. இந்த போட்டியானது இறுதி வரை இதய துடிப்பை அதிக படுத்தும் போட்டியாகவே இருக்கும்.
அம்பாதி ராயுடு விலகல் :
இந்த நிலையில் தான் சென்னை அணியில் பல வருடங்களாக இருந்த நட்சத்த்திர வீரர் அம்பாதி ராயுடு தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். இதன் பற்றி அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவில் “ஐபிஎல் போட்டியில் இரு பெரும் அணிகளான சென்னை மற்றும் மும்பையுடன் இணைந்து 204 போட்டிகள், 14 ஐபிஎல் சீசன்கள், 11 முறை பிளே ஆஃப், 8 முறை இருந்து போட்டி, 5 முறை ஐபிஎல் கோப்பைகள் என என்னுடைய ஐபிஎல் வழக்கை இருந்தது.
2 great teams mi nd csk,204 matches,14 seasons,11 playoffs,8 finals,5 trophies.hopefully 6th tonight. It’s been quite a journey.I have decided that tonight’s final is going to be my last game in the Ipl.i truly hav enjoyed playing this great tournament.Thank u all. No u turn 😂🙏
— ATR (@RayuduAmbati) May 28, 2023
இது என்னுடைய வாழ்க்கையில் ஒரு அற்புதமான பயணம். நான் இன்று நடக்கும் சென்னை vs குஜராத் போட்டியோடு என்னுடைய ஐபிஎல் வாழ்க்கையில் கடைசி போட்டி என்று முடிவு செய்து விட்டேன். நான் பல போட்டிகளில் விளையாடியது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. திரும்பு வர மாட்டேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் அம்பாதி ராயுடு. இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அம்பாதி ராயுடுவை பற்றி பேசவேண்டும் என்றால் இந்திய அணியிலும் சரி, சென்னை மற்றும் மும்பை அணியிலும் சரி பல போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். மேலும் பீல்டிங்கிலும் சிறப்பான திறமையை காட்டி ஆச்சரியத்தில் உள்ளக்கி இருக்கிறார். ஆனால் திறமை இருந்தும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் அது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
இப்படிபட்ட நிலையில் தான் ஐபிஎல் போட்டியில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அம்பாதி ராயுடு இந்த சீசனில் பெரிதாக எதுவும் ஆடவில்லை என்றாலும் குவாலிபயர் ஒன்றில் இவர் எடுத்த சில ரன்கள் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது குறிப்பிடதக்கது.





